குழந்தை பெற்றதும் குண்டாகி விடுகின்றீர்களா..!?  இனி எப்போதும் போல slim மாகவே இருக்கலாம்..!
May 11, 2018 1298 Views

குழந்தை பெற்றதும் குண்டாகி விடுகின்றீர்களா..!? இனி எப்போதும் போல slim மாகவே இருக்கலாம்..!

குழந்தை பெற்றதும் பெண்கள் திடீரென குண்டாகி விடுவார்கள் ..! அது வரை அழகை பாதுகாக்க முயற்சிக்கும் அவர்கள் பின் அழகை பற்றி சிந்திப்பதே இல்லை ..!
இது தவறானது பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் இருக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு தான் இவை ..! தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் உடல் நலனை கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
கவனச் சிதறல் மற்றும் சரியான கவனிப்பின்மையே அநேக தாய்மார்களின் உடல் எடை கூடுவதற்கும் தொப்பை போடுவதற்கும் காரணமாகும்.

பிரசவத்திற்குப்பின்னர் ஆயில் மசாஜ், வென்னீர் குளியல், நாட்டு மருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன் அடைந்து வந்தனர்.
பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை
பிரசவத்திற்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும்.
தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
புரதம், இரும்பு சத்து மற்றும் விட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.
தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்வது தடுக்கப்படும், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும்.

மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக சிறிது சிறிதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம்.
குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் பெண்கள் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.
சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் யோகாசனங்களும். உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கடைப்பிடிக்க வேண்டும்.

சில எளிய உடற்பயிற்சிகள்
மல்லாந்து படுத்துக்கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். பிறகு இடது காலை மேலே உயர்த்த வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும், இது போல் தினமும் பத்து முறை செய்யலாம். வயிறு உப்புசம் குறையும்.
நின்றுக் கொண்டு இரண்டு கை விரல்களும் கால் விரல்களும் தொடும் அளவு குனிய வேண்டும், பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும், இடுப்பு பகுதிக்கு இது நல்ல பயிற்சி.

மேசை மேல் அமர்ந்து வேலை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்யும் போது அது பெல்விக் மற்றும் கர்ப்பப்பையை வலுப்படுத்தும், அதாவது கீழே அமர்ந்து சாப்பிடலாம், காய்கறி நறுக்கலாம், இது போன்ற வேலைகளை கீழே அமர்ந்து செய்யலாம். நேரம் இருந்தால் குழந்தை பிறந்து ஐந்து மாதம் கழித்து நடைபயிற்சி மேற்கொள்ளலாம்

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிக் பாஸ் ஜூலி புது கட்சி ஆரம்பிக்கிறார்..! அவரே வெளியிட்ட தகவல்..!
Next இந்த இடங்களில் விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள் ..! அதிசயம் பாருங்கள்..!

You might also like

மருத்துவம்

ஆட்டிசம் உள்ள குழந்தைகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

இன்றைய தினம் உலக ஆட்டிசம் தினமாகும், குழந்தைகளுக்கு ஆட்டிசம் காணப்படுகின்றது என்பதனை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பது பற்றி கவனிப்போம். ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு. இதனை ஒரு நோய் என்றோ, மூளை

மருத்துவம்

முட்டை ஓட்டை தூளாக்கி இப்படி செய்தால் போதும் அதன் பின் மேஜிக் தான். அதிகம் பகிருங்கள் ..!

வழக்கமாக முட்டையை உடைத்துவிட்டு கோதை வீசி விடுவோம். .ஆனால் முட்டை ஓட்டில் உள்ள நன்மைகள் தெரியுமா.? நீங்களே படித்து பகிருங்கள்..!     மோசமான வாய் சுகாதாரத்தால் கிருமிகள் பற்களைத் தான் சொத்தையாக்குகின்றன. வாயில் சொத்தைப் பற்கள் இருந்தால், அது கடுமையான வாய்

மருத்துவம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும், வெங்காயத்தின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்… வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே