நடிகை ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலையா.? விகாஸ் சிங் மனு தள்ளுபடியால்  நீதி மன்றில் பரபரப்பு..!
May 11, 2018 947 Views

நடிகை ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலையா.? விகாஸ் சிங் மனு தள்ளுபடியால் நீதி மன்றில் பரபரப்பு..!

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கின்றது . கொலையா.? தற்கொலையா,? இயற்கை மரணமா.? என்று எல்லோருமே தலையை உருட்டிக் கொண்டிருக்க இவர் மட்டும் தான் வழக்கு தொடர்ந்தார் .

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொது நல வழக்கு தாக்கல் செய்த இயக்குனரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
துபாயில் உறவினரின் திருமணநிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகைஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி காலமானார்.

முதலில்மாரடைப்பு என கூறப்பட்டு வந்த நிலையில், மது அருந்தி குளியலறை தொட்டிக்குள் விழுந்ததே காரணம் என கூறப்பட்டது.
இவரின்மரணத்தில் எவ்வித சந்தேகமும்இல்லை என கூறிய துபாய் பொலிசார் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்தனர்.

இந்நிலையில்ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இயக்குனர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில்பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுனில் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி இன்சூரன்ஸ் பாலிசிஉள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இது கிடைக்கும், இந்த நிலையில் தான் ஸ்ரீதேவிமரணமடைந்துள்ளார், எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என வாதாடினார்.
ஆனால் துபாய் பொலிசார் நடத்திய விசாரணையில்சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous முறிந்த அல்லது விடுபட்ட எலும்பை உடனடியாக சரி செய்ய இதனை செய்யுங்கள்..! அதிகம் பகிருங்கள் அனைவருக்கும் உதவட்டும்..!
Next சுள்ளானின் பிடியில் சூப்பர் ஸ்டார் ! ஷாக்"கில் ரசிகர்கள்..!

You might also like

சினிமா

நடிகர் திலகமாக திரையில் தோன்ற பாக்கியம் கிடைத்த பிரபலம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக திரையில் தோன்றுவதற்கு அவரது பேரன் விக்ரம் பிரபுவிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் நடிகையர் திலகம் திரைப்படத்தில், சிவாஜியின் வேடத்தை அவரது பேரனான விக்ரம் பிரபு ஏற்று

சினிமா

பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஸ்பெஷல்! பிளாக்பஸ்டர் தான்

நடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்த படம் ஓரளவு ஓடினாலும் அண்மையில் வந்த குலேபகாவலி

சினிமா

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் அஞ்சலி நிகழ்வு

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழக திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த