காதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..!  காதலனின் நிலை..?
May 12, 2018 598 Views

காதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..! காதலனின் நிலை..?

காதல் வாழ வைப்பதை விட இப்போது சாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . எந்த பக்கம் திரும்பினாலும் காதலால் மரணங்களே நிகழ்கின்றது .

அந்த வரிசையில் தான் இந்த மரணமும்..! திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) என்ற இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கிடாச்சூரி பகுதியைச்சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா என்ற (17 வயது) யுவதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.

குறித்த யுவதி இளைஞனின் வீட்டுக்கு வந்தவேளை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யுவதியை ஒப்படைத்த இளைஞனின் பெற்றோர், இளைஞனை பிரித்து சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து குறித்த யுவதி காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச்செல்லுமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை காதலனான குறித்த இளைஞன் சம்பூர் பகுதிக்கு சென்று தனது காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்துள்ளார்.

அவ்வேளை பெண்ணின் உறவினர்கள் குறித்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.
இதேநேரம் மோட்டார் சைக்கிளை வேகமாக போகும் போது வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் காயங்களுக்குள்ளான 23 வயதுடைய காதலன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்..!? அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..!
Next இதய நோய் வந்த பின் மரணிப்பதை விட வரும் முன் காப்பது சிறப்பு..! இதோ இதய நோய் வராமல் இருக்க வழிமுறைகள்..!

You might also like

இலங்கைச் செய்தி

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஆகிறாரா கிரிக்கெட் வீரர் சங்கக்காரா.? தமிழ் மக்களுக்காகவா.?

எதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணியின் கீரிக்கெட் வீரர் சங்கக்காராவை போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேற்படி தேர்தலும் ஐ தே கட்சி சங்கக்காரவை அன்னம் சின்னத்தில் களம் இறக்க ஐ தே க முயற்சிகளை முன்னெடுத்துவரும்

இலங்கைச் செய்தி

பெற்றோருக்கு தெரியாமல் பைக்கில் சுற்றிய 17 வயது இளம் பெண் மரணம் !

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் காதலனுடன் காட்டுக் சென்ற யுவதி மரணமான செய்தி இலங்கையின் பண்டுவஸ்னுவர பகுதியில் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வெளியான தகவலில் பண்டுவஸ்னுவர ரத்முளுகந்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரை பெற்றோர்

இலங்கைச் செய்தி

100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்..! இதோ வீடியோ காட்சிகள் ..! இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..!;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..!

முள்ளிவாய்க்கால் ஓலங்கள் இன்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த கொடூர இலங்கை இராணுவத்தின் வெறியாட்டம் . ஒட்டுமொத்த ஈழ தமிழ் இனத்தையும் ஒன்று சேர கொன்று குவித்து ஏப்பம் விட்ட நாள். உலக நாடுகள் குரல் கொடுக்கும் காப்பாற்றும் என்று ஒவ்வொரு