இதய நோய் வந்த பின் மரணிப்பதை விட வரும் முன் காப்பது சிறப்பு..! இதோ இதய நோய் வராமல் இருக்க வழிமுறைகள்..!
May 13, 2018 1141 Views

இதய நோய் வந்த பின் மரணிப்பதை விட வரும் முன் காப்பது சிறப்பு..! இதோ இதய நோய் வராமல் இருக்க வழிமுறைகள்..!

நோய்கள் சிறியவர் யார் பெரியவர் என பார்ப்பதில்லை யாரையும் விட்டு வைப்பதும் இல்லை . தடுக்க வழி முறைகள் இருந்தும் எமக்கு அதற்கான நேரம் கிடைப்பதில்லை . இதனால் பல இழப்புகள் . எத்தனை பேர் என்ன சொன்னாலும் நாம் கண்டுகொள்வதில்லை தயவு செய்து இதை படியுங்கள் படித்து உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் . நோய்கள் வந்த பின் காப்பதை விடுத்து வரும் முன் காப்போம்…! எப்போதும் நோய் இன்றி வாழ்வோம்..
ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களும் சீராக செயல்பட முடியும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் இறங்க வேண்டும்.

அதற்கு முதலில் ஒருவர் செய்ய வேண்டியது ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது தான். ஆரோக்கியமான டயட்டினால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல நோய்களுக்கு வழிவகுக்கும் தொப்பையை வரவிடாமல் தடுக்கலாம்.
நிச்சயம் நாம் சாப்பிடும் ஏராளமான உணவுகளால் நமது இதயத்தின் ஆரோக்கியம் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் ஒருவர் அளவுக்கு அதிகமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறாரோ, அவர்கள் உடல் பருமனடைவதோடு, இதய நோயினாலும் பாதிக்கப்படக்கூடும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளுள் முதன்மையானது ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது ஆகும்.
ஒருவரது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோயின் தாக்கத்தைத் தடுக்கும் ஏராளமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வந்தாலே, ஒருவரால் இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதய நோயில் ஒன்றான கார்டியாக் அரெஸ்ட் மூலம் திடீரென்று மரணத்தை தழுவினார். இச்செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒருவர் எப்போது வேண்டுமானாலும் இதய நோயால் பாதிக்கப்படலாம். ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் உறுப்புக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வந்தால், மரணத்தை சந்திப்பதைத் தவிர்க்கலாம். இக்கட்டுரையில் ஒருவரது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.
சால்மன்

சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 இரத்தம் உறைவதைத் தடுத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் இது இதய நோய்க்கு வழிவகுக்கும் ட்ரைக்ளிசரைடுகள் என்னும் ஒருவகை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். ஆகவே வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது சால்மன் மீனை உணவில் சேர்த்து வாருங்கள். ஒருவேளை சால்மன் மீன் கிடைக்காவிட்டால், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களையாவது சாப்பிடுங்கள்.
வால்நட்ஸ்

ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்புக்களுக்கு பதிலாக மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால், உடலில உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். மேலும் வால்நட்ஸிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. வேண்டுமானால், பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆளி விதை, சியா விதைகள் போன்றவற்றையும் அன்றாடம் சாப்பிடலாம்
ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி பழங்களில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும். ராஸ்ப்பெர்ரி கிடைக்காவிட்டால், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றை சாப்பிடுங்கள்.
கொழுப்பு குறைவான பால் அல்லது தயிர்

பால் பொருட்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எப்போது ஒருவர் கொழுப்பு குறைவான பால் அல்லது பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்கிறாரோ, அப்போது அவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். ஆகவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் மற்றும் அதற்கு ஏற்ப உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த வகை நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருவேளை கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பீன்ஸ்களை வாங்குவதாக இருந்தால், அவற்றில் சோடியம் குறைவாக அல்லது உப்பு சேர்க்காததை வாங்குங்கள்.
ஏனெனில் சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அப்படியே உப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அவற்றை நீரில் நன்கு கழுவி, பின் பயன்படுத்துங்கள். கரையக்கூடிய நார்ச்சத்துக்களானது கொண்டைக்கடலையில் மட்டுமின்றி, கத்திரிக்காய், வெண்டைக்காய், ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றிலும் தான் உள்ளது. வேண்டுமானால் இவற்றை சாப்பிடுங்கள்.

ஓட்ஸ்
ஓட்ஸில் பீட்டா-க்ளுக்கான் என்னும் ஒரு வகை நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். 1 1/2 கப் வேக வைத்த ஓட்ஸில், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஒரு நாளைக்குத் தேவையான அளவு பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இந்த பீட்டா க்ளுக்கான் பார்லி, கடற்பாசி போன்றவற்றிலும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது
ஆலிவ் ஆயில்

ஆரோக்கியமான எண்ணெயாக கருதப்படும் ஆலிவ் ஆயிலில் மற்ற உணவுப் பொருட்களை விட சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவான அளவிலேயே உள்ளது. விலங்கு பொருட்களில் இருந்து பெறப்படும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, தமனிச் சுவர்களில் கொழுப்புக்களை படியச் செய்து, இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கும். ஒருவேளை உங்களுக்கு ஆலிவ் ஆயில் பிடிக்காவிட்டால், கனோலா எண்ணெய் மற்றும் குசம்பப்பூ எண்ணெயைப் (safflower oil) பயன்படுத்தலாம்.
டார்க் சாக்லேட்

கொக்கோ என்னும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டில், ப்ளேலோனால்கள் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் செய்யும். மேலும் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, தமனிச் சுவர்களில் கெட்ட கொழுப்புக்கள் தேங்காமல், தமனியை சுத்தமாக வைத்திருக்கும். அதிலும் டார்க் சாக்லேட்டில் தான் அதிகளவு ப்ளேவோனால்கள் மற்றும் குறைவான சர்க்கரை உள்ளது. சர்க்கரை கூட இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா?
அவகேடோ

அவகேடோ பழம் வழுவழுவென்று இருப்பதால், அப்பழம் கொழுப்பு நிறைந்த பழம் போன்று காணப்படும். அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது தான். ஆனால் அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு என்னும் நல்ல கொழுப்பு அதிகளவு நிறைந்துள்ளது. இது உடலினுள் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தினுள் நாள்பட்ட அழற்சியால் ஏற்படும் பெருந்தமனி தடிப்பு ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக அவகேடோ பழத்தில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் இப்பழத்தை அளவாக எடுப்பதே நல்லது.

உப்பில்லாத பாதாம் வெண்ணெய்
முழு தானியய டோஸ்ட்டின் மீது நட்ஸ் வெண்ணெய் தடவி சாப்பிட அற்புதமாக இருக்கும். நட்ஸ் வெண்ணெய்களில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. எனவே எப்போதும் நட்ஸ் வெண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவை உப்பு இல்லாததாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உப்பில்லாத பாதாம் வெண்ணெய் கிடைக்காவிட்டால், உப்பில்லாத வேர்க்கடலை வெண்ணெய் வாங்கி சாப்பிடுங்கள்.
சிவப்பு திராட்சை

சிவப்பு நிற திராட்சையில் ரெஸ்வெராட்ரால் என்னும் இரத்தத்தில் உள்ள இரத்த வட்டுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். ரெட் ஒயின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற கூறுவதற்கு காரணம், இது இந்த சிவப்பு திராட்சையைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் தான். ஆனால் எந்த ஒரு உடல்நல நிபுணர்களும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ரெட் ஒயினைக் குடிக்க பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் அதில் ஆல்கஹால் சிறிதளவு உள்ளது. ஆகவே ரெட் ஒயினை குடிக்க நினைத்தால், உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
தக்காளி

தக்காளி கூட இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்களாகும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின்கள், ப்ரீ-ராடிக்கல்களால் இதயத்திற்கு ஏற்படும் அபாயத்தைத் தடுத்து, இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்

Previous காதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..! காதலனின் நிலை..?
Next பர்தா அணிந்து மக்களை ஏமாற்றிய இளைஞனின் வித்தியாசமான ஆசை..! கும்மி எடுத்த மக்கள்...! என்ன ஆசை என்று நீங்களே பாருங்கள்..!

You might also like

மருத்துவம்

விஞ்ஞானத்தை வியக்க வைத்த சிறு நீரக கற்களை உடனடியாக நீக்கும் இயற்கை மருந்து..! இப்படி செய்யுங்கள் போதும்..!

சிறு நீரக கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது சிறியவர் பெரியவர் என்றெல்லாம் கற்களுக்கு தெரியாது எல்லோருக்குமே அவஸ்தைதை கொடுத்து விட்டு கடந்து செல்கிறது ..! டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து பற்றிய பதிவு இது கோவையில் மூன்றாம்

மருத்துவம்

பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து

பெண்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகினற்னர். பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடி;ககைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். பெண்கள் மாரடைப்பினால் பாதிக்கப்படக்கூடிய அறிகுறிகள்…

மருத்துவம்

வித்தியாசமான & இலகுவான மருத்துவ குறிப்புகள்..! இது முக்கியமாக பெண்களுக்கு ..!

ஆரோக்கியமானவர்கள் பெண்களாக இரிந்தாலும் அடிக்கடி நோய் வந்து வாட்டுவதும் அவர்களை தான் இதோ இலகுவான டிப்ஸ்..! *சரும நோய்* கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்