இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 15-05-2018, வைகாசி 01, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 05.18 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் பகல் 10.56 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சர்வ அமாவாசை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிபலன்
5/15/2018
மேஷம்
மேஷம்: மாலை 5.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 5.12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.
கடகம்
கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.
சிம்மம்
சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
கன்னி
கன்னி: மாலை 5.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 5.12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.
மீனம்
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous அப்பாவுக்கு சவால் விடுமளவு வளர்ந்த ஸ்ரீகாந்த் மகன்..! ஷாக் ஆன ரசிகர்கள் ..! என்ன அழகு டா இது ..!
Next பெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி அதிர்ச்சி தகவல்..! அதிகம் பகிருங்கள்..!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

தங்கையின் மனவளர்ச்சி குன்றிய இரண்டு பிள்ளைகளுக்கு தாய்மாமன் செய்த கொடூரம்..! தங்கைக்காக இப்படி செய்வார்களா..?

அன்பு சிலரை பைத்தியமாக்கும் அப்படி ஆனதால் ஒரு அண்ணன் செய்த செயல் ஒன்றும் அறியாத இரண்டு பிஞ்சுகளின் உயிர் பிரிந்திருக்கிறது. தயவு செய்து யாரும் இனி இப்படி செய்யாதீர்கள் . தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ரெட்டி. இவருக்கு லட்சுமி

நிமிடச் செய்திகள்

ஜெனீவாவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

ஜெனீவாவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமு; என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரின் நேற்றைய (19) அமர்வில்

நிமிடச் செய்திகள்

கேரளாவில் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 400 பேர் காணவில்லை

கேரளாவில் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 400 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கேரளாவில் கொச்சி, விழிஞ்ஞம், கோவளம் போன்ற பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 400-க்கும் மேற்பட்ட மீனவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது புயல் காரணமாக கேரள மாநிலத்தின்