எப்போதும் இளமையான தோற்றத்திற்கும் முதுமையை தள்ளிப்போடவும் உதவுகிறது மாதுளை..!  இப்படி சாப்பிடுங்கள் .
May 14, 2018 749 Views

எப்போதும் இளமையான தோற்றத்திற்கும் முதுமையை தள்ளிப்போடவும் உதவுகிறது மாதுளை..! இப்படி சாப்பிடுங்கள் .

மாதுளம்பழம் பழங்களில் அழகானதும் சுவையானதுமாகும் நமது செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியாக்கள்தான் சக்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில்தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் , முக்கிய வளர்சிதை மாற்றங்களும் நடக்கின்றன.

வயது ஆக ஆக, மைட்டோக்காண்ட்ரியாவின் செயல்பாடுகள் குறையும். இதனால் செல்லின் செயல்கள் பாதித்து, செல்சிதைவு ஏற்படுகிறது. இதனால் திச்சுக்கள் பாதிப்படைந்து படிப்படியாக உடலின் முக்கிய செயல்கள் பாதிக்கும். தசைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், வயதினால் உண்டாகும் நோய்கள் மெல்ல எட்டிப்பார்க்கும். இப்படித்தான் முதுமை நடக்கின்றது.

யுரோலிதின் ஏ என்ற ஒரு மூலக்கூறு, பாதிப்படைந்த மைட்டோகாண்ட்ரியாவில் மறுசுழற்சியை தூண்டி, அதன் செயல்களை ஊக்குவிக்கும். இதனால் செயல்கள் தேங்காமல் துரிதமாக நடந்து, முதுமையையும் அதன்பாதிப்புகளையும் விரட்டும் என்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பாட்ரி என்ர ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

இந்த ஆய்வினை உருண்டைப் புழுவிடம் சோதனை செய்யப்பட்டது. யுரோலிதின் ஏ மூலக்கூறுவை புழுக்களின் உடலுக்குள் உட்செலுத்தி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஒப்பீட்டு புழுவை விட , சோதனைப் புழுவில் ஆயுட்காலம் 45 % அதிகமாக நீடித்தது என்ற ஆய்வு குழு கூறியுள்ளது.

இந்த அற்புதமான மூலக்கூறுவான யுரோலிதின் ஏ வை உடலிலேயே உற்பத்தி செய்ய , நல்ல பேக்டீரியக்கள் தேவை. அவைகள்தான் சிறுகுடலில் இந்த மூலக்கூறுவை உற்பத்தி செய்கின்றன.

இந்த மாதிரியான நுண்ணிய ஆக்கப்பூர்வமான செயல்கள்களுக்கு நாம் உண்ணும் உணவும் மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவ்வகையில் மாதுளம் பழ ஜூஸ் யுரோலிதின் மூலக்கூறுவை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

இதனால் தசைகள் வலுப்பெற்று, இளமையாக இருக்க உதவுகின்றன, முதுமையை தள்ளிப்போட வைக்கும் என்று மற்றொரு ஆராய்ச்சியாளர் க்ரிஸ் ரின்ஸ்ச் கூறுகின்றார்.


 

Previous ஆண்மை அதிகரிப்பற்கு மட்டும் அல்ல எத்தனை பிரச்சனைக்கு தீர்வாகிறது பாருங்கள் நன்னாரி. .! இப்படி செய்து குடியுங்கள்...!
Next ஹஜ்ரி ஆண்டுக்கான ரமலான் மாத தலைபிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை! - கொழும்பு பெரிய பள்ளிவாசல்

You might also like

மருத்துவம்

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி எமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை அகற்றுவதற்கு சுலபமான வழிகள் இயற்கை மருத்துவ முறைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. மனித உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய தங்கி இருக்கும் அதுவே உடல் எடை

மருத்துவம்

நீண்ட நேர உடலுறவு மற்றும் மூட்டு வலிகளுக்கு உடனடி தீர்வு முடக்கொத்தான்..! இதை மட்டும் செய்யுங்கள் ..!

மருத்துவ குறிப்புகள் அனைவருக்கும் தேவையானது தான் அதுவும் இலகுவில் கிடைக்க கூடியது என்றால் எல்லாருமே விரும்பி ஏற்றுக்கொள்வோம் அப்படி பட்ட மருத்துவம் தான் இதுவும் . சரியான முறையில் பயன் படுத்தி நோய் இன்றி மகிழ்ச்சியாய் வாழுங்கள்..! முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum

மருத்துவம்

சாப்பிடும் போது இந்தப் பழக்கம் உடையவரா நீங்கள்

சாப்பிடும் போது இந்தப் பழக்கமுடையவர்களின் உடல் எடை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது என ஆய்கள் தெரியவந்துள்ளது. வேகமாக உணவு சாப்பிடுவோருக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். வேகமாகச் சாப்பிடுபவரா நீங்கள்?