இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
May 15, 2018 548 Views

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 16-05-2018, வைகாசி 02, புதன்கிழமை, பிரதமை திதி பகல் 02.28 வரை பின்பு வளர்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.59 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் காலை 08.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம் . இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
16.05.2018
ராசிபலன்கள் .
மேஷம்:
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்
ரிஷபம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம்:
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். தேவையான பணம் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.
கடகம்:
காரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.
சிம்மம்:
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.
கன்னி:
மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவும் உண்டு. தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படும்.
துலாம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். நண்பகல் முதல் கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு:
புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
மகரம்:
நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்:
இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
இன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..! இப்படியும் ஒரு பெண்ணா..!?
Next அழகான இடத்தில் ஆபத்து தானாம்..! இவங்களும் அப்படி தான்..! அட ஆமாங்க இவங்கள கண்டால் இதில் இருக்கும் பொலீஸ் நம்பருக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்..!

You might also like

நிமிடச் செய்திகள்

தாம்பத்தியமும் தாரமும்..! திருமணமானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்..!

அழகான ஒரு பதிவு..படித்ததில் பிடித்ததால் பகிர்கிறோம்..! இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..! ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்!!!* எழுபத்தைந்து வயதில்….. ஆதரவு இன்றி நிக்குது மனசு…

நிமிடச் செய்திகள்

மகளுக்காக தாய் செய்த செயல் …! நீட் தேர்வால் நடக்கும் கொடுமைகள்..!

தமிழக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் காரணம் எதேச்சதிகார அரசும் எடுபிடி மாநில அரசும் தான் என்று மக்கள் பேச தொடங்கி உள்ளார்கள். . எத்தனை எத்தனை கஷ்டங்கள் அனிதாவின் மரணத்தின் பின் கூட அரசி திருந்தவில்லை என்றால் ..?

நிமிடச் செய்திகள்

காஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள மன்கோட் கிராம பகுதியில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கி மற்றும்