பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..!  படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!
May 15, 2018 9158 Views

பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..! படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!

படித்ததில் வலித்தது .
பெண்களாக
பிறந்ததை தவிர
வேறு குற்றமேதும்
புரிந்திருக்க வாய்ப்பில்லை
உங்கள் பார்வையில்
எங்களுக்கு இரண்டு மார்பகங்களும்
ஒரு யோனியும் மட்டும் தான்
தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது

உணர்ச்சி வசப்பட்டு கூட
உங்களால் எங்களையொரு
குழந்தையாக பார்க்கமுடியாது
போன பின் உங்களுக்கெள்ளாம்
உணர்ச்சியென்று ஒன்று உள்ளதா
காமம் மட்டுமே கண்களுக்கு
தெரிந்திருந்தால் உங்கள்
தாய் கூட பிரசவ அறையில்
பிறரால் கற்பழிக்கப்பட்டிருப்பாள்

உங்கள் ஆண்குறிகளின்
வீரியம் தான் தவறு செய்ததாயிருந்தால்
உங்கள் அக்காவும் தங்கையும் கூட
பிறரால்ப் கற்பழிக்கப்பட்டிருக்கலாம்
உங்கள் வயது தான்
தவறு செய்ததாயிருந்தால்
உங்கள் மனைவி கூட மற்றவர்களால்
கற்பழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது

உலகிலுள்ள எல்லாப் பெண்களும்
உங்களைப் போன்றவர்களால்
கற்பழிக்கப் பட்டுவிட்டால்
ஆண்களென்ற நீங்களெல்லாம்
வெறும் விலைமகன்களாகத் தான்
வாழப்போகிறீர்களா

குட்-டச் பேட்- டச் பற்றி
குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுப்பதை விட பெரியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்களென்று

குற்றவாளிகளுக்கு தண்டனை யென்று சிறைவாழ்வு கொடுக்காமல்
அரபு நாடுகளைப்போன்று
ஆண்மையை துண்டித்து விடுங்கள்
நரம்புகள் புடைத்தேனும்
உயிர்பிரியும் வலி உணரப்பட வேண்டும்

மன்னிப்புகள் தொடருமாயின்
எங்களைப்போன்ற ஹாஷினிகளும்
சில நந்தினிகளும் பல நிர்பயாக்களும்
முடிந்தவரை முஷ்கின் போன்றவர்களும்
தொடரவே செய்வார்கள்

இதைவாசிக்கும் அண்ணணோ
அக்காவோ அம்மாவோ அப்பாவோ
தம்பியோ தங்கையோ யாராக இருந்தாலும்
இவர்களை தண்டிக்கச்சொல்லுங்கள்
மன்னித்து விடுவதென்பது
எங்களை போன்றவர்கள் மற்றொரு முறை கற்பழிக்கப்படுவதற்கு சமமாகும்
#வரிகள் #வலித்திருந்தால் #உணர்ந்திருக்கிறீர்கள் #என்று #நம்புகிறேன்

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

திருமதி கல்கி

Previous அழகான இடத்தில் ஆபத்து தானாம்..! இவங்களும் அப்படி தான்..! அட ஆமாங்க இவங்கள கண்டால் இதில் இருக்கும் பொலீஸ் நம்பருக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்..!
Next தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாய் கற்பழித்து கொன்ற கொடூரன்...!

You might also like

டீக்கடை டிப்ஸ்

இரவில் எப்படி உறங்க வேண்டும் ..!? இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..!

பொதுவாகவே ஒவ்வொருவரின் உறங்கும் விதம் வித்தியாசமான முறையில் இருக்கும் . இப்படி தான் தூங்க வேண்டும் என்று சொன்னாலும் கேட்கும் நிலையில் இருக்க மாட்டார்கள் . ஆனால் உறங்கும் போது எப்படி உறங்க வேண்டும் என்று ஒரு முறை உள்ளது .

டீக்கடை டிப்ஸ்

ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்hயவில் சரக்கு விமானமொன்றில் தங்கம் மற்றும் வைரங்கள் மழையாக பொழிந்தமை பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர்

டீக்கடை டிப்ஸ்

மத்தி எனும் இந்த மீன் பிரியரா நீங்கள்..? அப்படியானால் இதை கட்டாயம் படியுங்கள்..!

பொதுவாகவே மீன் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக சிலர் இந்த மீனை விரும்பி சாப்பிடுவார்கள்..! தமிழகத்தில் அதிகளவு கிடைக்கும் மீன்களில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு