கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் 14 லட்ச ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் !!! பில் உள்ளே !

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் 14 லட்ச ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் !!! பில் உள்ளே !

 

கொழும்பு மாநகர சபையின் 1வது பொதுச் சபை கூட்ட சாப்பாட்டு செலவு பதினான்கு லட்சம் ரூபாய் !!!!

மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரபிராகஷ் கண்டனம்

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு கடந்த 05.04.2018 புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது காலை நேர உணவுக்காக ரூபா 155,025.00 ரசல்ஸ் (பிவிடி) நிறுவனத்திற்கும், பகல் உணவுக்காக ரூபா 990,000.00 ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கும், மாலை சிற்றுண்டிக்காக ரூபா 121,800.00 அலும்கா கெட்டர்ஸ் நிறுவனத்திற்கும், இரவு உணவுக்காக ரூபா 150,000.00 ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு உணவுச் செலவாக ரூபா 1416,825.00 செலவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தொகையானது கொழும்பு மாநகர சபையில் அங்கத்துவம் வகிக்கும் 119 உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவின் கிட்டத்தட்ட 35% ஆகும். பொதுமக்களின் வரிப்பணம் இவ்வாறு வீண்விரயமாக்கப்படுவது தொடர்பில் எனது கருத்தை இன்றைய தினம் சபையில் பதிவு செய்திருந்தேன் என மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரபிராகஷ் தனது முக நூலில் குறிப்பிட்டுள்ளார்.

119 உறுப்பினர்களை அங்கத்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபையில் காலை உணவு 500 பேருக்கும், மதிய உணவு 500 பேருக்கும், மாலை சிற்றுண்டி 400 பேருக்கும் இரவு உணவு 250 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்லாமல் மதிய உணவுக்காக ஐந்து இடங்களில் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலைமையில் மூன்று விலைமனுக்களின் பிரதிகள் மாத்திரமே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தின் ஊடாக மதிய போசனத்திற்கு (ரூபா 1980.00 அடிப்படையில்) அனுமதி வழங்கப்பட்ட விலைமனுக்கோரலின் பிரதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்படவில்லை.என மேலும் கூறியுள்ளார்.

 

Previous ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!
Next தத்தெடுத்து வளர்த்த குழந்தை சித்திரவதை செய்து கொலை..! கொடூரத்தின் உச்சம்..!

You might also like

டீக்கடை டிப்ஸ்

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு

Uncategorized

பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!

பிறந்து சில சில நாட்களே ஆன ஆண் சிசு ஒன்று பெரகல சிங்காரவத்தையில் மீட்பு ! பெரகல சிங்காரவத்தை கிராமத்தில் உயிரிழந்த சிசுவின் சடலத்தை அப்புத்தளை பொலிசார் மீட்டுள்ளனர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் பிறந்த இந்த ஆண் சிசுவை ஆட்டோவில்

Uncategorized

கணவனின் நண்பனோடு கல்லக்காதல் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி – அண்ணா நகரில் சம்பவம் !

சென்னை அண்ணா நகர் கிழக்கு…. சென்னையில் அண்ணா நகர் கிழக்கு வி ஒ சி காலணியில் வசிக்கும் கோபி மற்றும் – சுமித்திரா இருவரும் கணவன் மனை இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் கணவன் கோபியின் நண்பன் கலைச்செல்வன் அடிக்கடி வீட்டுக்கு