கர்ப்பிணி பெண்ணையையும் தாயையும் பெட்ரோல் ஊற்றிக் கொன்ற கொடூரன்..!   காரணம் இது தான்…!
May 16, 2018 830 Views

கர்ப்பிணி பெண்ணையையும் தாயையும் பெட்ரோல் ஊற்றிக் கொன்ற கொடூரன்..! காரணம் இது தான்…!

கொடூரர்கள் சூழ் உலகம் இது என்பது உண்மை தான் . அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு கரணத்தை தெரிந்துகொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும் முடிவதில்லை செய்வது தவறு எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை .

பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி என்ற மகள் உள்ளார். திருச்சியில் சிறப்பு காவல் படை பொலிசில் பணியாற்றும் தங்கவேல் என்பவர் பேக்கரிக்கு அடிக்கடி வந்துபோனதன் மூலம் சுவாதிக்கும், தங்கவேலுக்கும் காதல் மலர்ந்துள்ளது,

செப்டம்பர் மாதம் 22 ம் தேதி வீட்டிற்கு தெரியாமல் முறைப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள்.
திருமணம் ஆனாலும் தன் தாயின் வீட்டிலே இருந்தாலும் அடிக்கடி காதல் திருமணம் செய்த கணவரை பார்க்க அடிக்கடி வெளியே செல்வாராம் இதன் விளைவு சுவாதி 8 மாத நிறைமாத கர்ப்பிணியானார்.

நடந்தவை அனைத்தையும் தனது தாயிடம் சொல்லி, எப்படியாவது தந்தையிடம் சம்மதம் வாங்கி தருமாறு சுவாதி கேட்டுள்ளார்
ஆனால், தனது கணவனிடம் சொல்வதற்கு மல்லியாக அஞ்சியுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தந்தைக்கு தெரிந்ததால், வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்தது. இதனையடுத்து கொஞ்சநாள் பொறுமையாக இருங்கள் என கூறியுள்ளார் தந்தை.
இதற்கிடையில், வீட்டில் பிரச்சனையை பேசி விட்டேன். விரைவில் என்னுடைய பெண்ணை உங்க வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி சுவாதியின் தாய் தன் மருமகன் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.

இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்க, தனக்கு தெரியாமல் மருமகனை பார்க்க சென்ற மனைவி மீது அதிக கோபம் கொண்ட சேகர், இருவரையும் தீ வைத்து கொளுத்திவிட தீர்மானித்துள்ளார்.
ஏற்கனவே பெட்ரோல் வாங்கி பேக்கரி முழுவதும் ஊற்றி லைட்டரை ரெடியாக கையில் வைத்துக்கொண்டார். வழக்கம் போல் தாய், மகள் இருவரும் கடைக்கு வந்திருக்கிறார்கள்.
அப்போது, லைட்டரை பற்ற வைத்ததில் இவர்கள் இருவர் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது, இவர்களை காப்பாற்றுவது போல சேகர் நாடகமாடியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த ஸ்வாதி, மல்லிகா இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்புத்துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சேகருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்துபோனார், 8 மாத கர்ப்பிணியான மகள் ஸ்வாதி உயிருக்கு போராடி வருகிறார்.
கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கர்நாடகா முதல்வராக போகும் இவரது இரண்டாவது மனைவி தான் மகள் வயது இருக்கும் பிரபல தமிழ் திரைப்பட நடிகை இவராம்..! அட இவரா நீங்களே பாருங்கள்..!
Next பெற்ற மகளையே பெற்றோல் ஊற்றி கொளுத்திய தந்தை - நடந்தது என்ன ? - சென்னை

You might also like

இந்தியச் செய்தி

15 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! துடிதுடிக்க வைத்து கொன்ற கொடூரர்கள் ..!

தற்போது இந்தியாவில் கொலை என்பது சர்வ சாதாரணமாகி உள்ளது .. பச்சை குழந்தைகள் குமரிகள் வயதானவர்கள் என்று யாரையும் யாரும் விட்டு வைப்பதில்லை. எப்படி இரக்கமற்று நடந்துகொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை ..! இந்தியாவில் 15 வயது சிறுமியை அவரின் இரண்டு

இந்தியச் செய்தி

எங்களை கொலை செய்யுங்கள்..! கண்ணீர் விட்டு கதறும் அப்பாவி இரு பெண்கள்..!

பெண்கள் நிஜத்தில் தைரியத்தை இழந்து வருகின்றார்கள் என்பது தான் நிஜம் . காரணம் அப்பாவி பெண்களிடம் தானே ஆண்களால் வீரத்தை காட்ட முடியும்..! தங்களது சொந்தநிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர்

இந்தியச் செய்தி

முனைவர் பட்டத்துக்காகவே மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்தியதாக கூறியுள்ளார் – பேராசிரியர் நிர்மலா தேவி

மாணவிகளை பாலியலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள மதுரையில் உள்ள பிரபல கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி மேற்படி கூறியுள்ளார் இதுகுறித்த விசாராணைகளின் போது இந்த செயல்பாட்டுக்கு மேலும் பல பேராசிரியர்கள் தனக்கு உதவியளித்ததாகவும் தெரிவித்துள்ளார் மேலும் ஒரு