ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!
May 16, 2018 1568 Views

ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!

இதெல்லாம் என்ன சொல்வது என்று தெரியவே இல்லை . ஏன் இப்படி பெண்கள் ஏமாறுகிறார்கள் .? எத்தனை செய்திகள் பார்த்தாலும் கேட்பதாக இல்லை . மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம். தயவு செய்து திருந்துங்கள் ..!

ஃபேஸ்புக் காதல்.. முற்றுலும் பொய் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், சிலரின் அசாத்திய வாய் திறமையால்.. இளம்பெண்கள் ஏமாறுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது..

சென்னையில் பேஸ்புக் காதலினால், இளம் பெண் ஒருவருக்கு அவரின் தந்தை வயதுள்ள ஒருவர், ஓட ஓட விரட்டி தாலி கட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
திருவேற்காடு பகுதியை சேர்ந்த வீரசாமியின் மகள் சுமித்ரா. இவர் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் அதிக நேரம் சாட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், முகநூலின் மூலம், சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த வேலு சுமித்ராவுக்கு அறிமுகமாகி நட்பாகி, பின் அவர்களுக்குள் காதல் வந்துள்ளது. வேலுக்கு ஏற்கனவே திருமணமாகி, சுமத்ரா வயதில் ஒரு பெண்ணும் உள்ளது.

ஆனால், வேலு இந்த விடயத்தை மறைத்து அந்த இளம் பெண் சுமித்ராவிடம் பழகியுள்ளார். காதல்கோட்டை படம் போலவே முகம் பார்க்காமல் காதலித்துவந்த இருவரும், கடந்த மாதம் 24ம் தேதி நேரில் சந்திக்க வேண்டும் என்று சுமித்ராவை வேலு அழைத்துள்ளார்.

நேரில் வந்த சுமித்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றுள்ளார். அப்போது திடீரென வேலு தான் எடுத்து வந்த தாலியை சுமத்ரா கழுத்தில் கட்ட முயற்சிக்கவே, அவர் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளார். இருந்தும் விடாப்பிடியாக தாலி கட்டிவிட்டார் வேலு.
பின் ஒருவழியாக அங்கிருந்து தப்பியோடிய சுமித்ரா தன் பெற்றோரிடம் கூறி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளியே வந்த வேலு, சுமித்ரா வீட்டிற்கு சென்று, மரியாதையாக என்னுடன் குடும்பம் நடத்த வா.. என்றும், வரவில்லை எனில் உன்னை கொள்ளை செய்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, மீண்டும் திருவேற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேலுவை சிறையில் அடைத்துள்ளனர்.மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!
Next கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் 14 லட்ச ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் !!! பில் உள்ளே !

You might also like

Uncategorized

ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் கண்ணீர் பதிவு…

இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும்

டீக்கடை டிப்ஸ்

மனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா

விந்தை மிகு மனித உடலின் பல்வேறு அற்புதங்கள் தொடர்பிலான தகவல்களை இந்த பகுதியின் ஊடாக நாம் வானவில் எப்.எம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு

டீக்கடை டிப்ஸ்

பாகிஸ்தானில் கர்ப்பிணி பாடகி மீது துப்பாக்கிச் சூடு

இசை நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்து கொண்டே பாடலை பாடிய கர்ப்பிணி பாடகி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அதில் பாடகி சமீனா