உடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும்  இல்லை ..! வரதட்சணை கொடுமையின் உச்சம்..!

உடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..! வரதட்சணை கொடுமையின் உச்சம்..!

வரதட்சணை இதனால் பதிக்கப் படாத பெண்ணை பெற்றவர்களே கிடையாது . ராட்சத வரதட்சணை என்று கூட சொல்லலாம் .

வரதட்சணை என்பது திருமணத்தின்போது பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் வரதட்சனை கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகள் எட்டாயிரத்திற்கும் அதிகம் என செய்திகள் வெளியாகின.

திருமண விஷயத்தில் பெண்ணை ஒரு பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கும் சமூக மனப்பாங்கு இந்தியாவில் இன்னும் பெரிதாக மாறியிருக்கவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ நீண்ட நாட்களாக அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க சென்ற ஆணின் குடும்பத்தார் பெண் வீட்டாரிடம் அதிகளவில் வரதட்சனை கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் தன்னை பெண் பார்க்க வந்த நபரை தனியாக பேச வேண்டுமென்று அழைத்து அவரிடம், உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஆனால், இருப்பது அனைத்தையும் உங்களுக்கு வரதட்சனையாக கொடுத்துவிட்டு தன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு இந்த கல்யாணம் செய்ய எனக்கு விருப்பமில்லை.
என்னிடம், இருக்கும் சுத்தமான உடல், மற்றும் உள்ளத்தையும் தவிர கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையான மனைவியாய் உங்களுடன் இருக்க முடியுமே தவிர எதுவும் இல்லை . திருமணம் கனவாகவே இருந்துவிட்டு போகட்டும் எனக் கூறி அழுகிறாள்.

ஏற்கனவே வரதட்சணை பிடிக்காத ஆணும் உணர்ந்துகொள்கிறார். எதேச்சையாக மகளின் பேச்சை கேட்ட தந்தை கண்ணீர் வடித்த படி நிக்க உண்மையான ஆண் மகனாய் செயற்படும் மணமகன் உங்கள் மகளை ராணி போல் வைத்துக் கொள்கிறேன் எதுவும் வேண்டாம் என சுபம் போடுகிறார்கள்.

இது ஒரு குறும்படமாக இருந்தாலும் கோடி அர்த்தங்களை சொல்லி பயணிக்கின்றது ..! மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நினைவேந்தல் நிகழ்வில் செருப்பு வீச்சு..வீசியது யார் ..? முல்லைத்தீவில் பதற்றம்..!
Next நினைவேந்தலில் பரிகாரம் செய்த இரானுவ வீரர்கள் !-

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

சில அறுவெருப்பான விடயங்கள் தான் அதிசயம்..! இது என்ன தெரியுமா நீங்களே படியுங்கள்..!

உலகில் சில விடயங்கள் வித்தியாசமானது . சொன்னால் நம்பவா போறீங்க ஆனாலும் இத நம்ப தான் வேண்டும். சில அறுவெருப்பான விடயங்கள் கூட அதிசயம் தான் . பாருங்கள் புரியும்..! கற்றது கை அளவு, அறியாதது கடல் அளவு என்பார்கள். இது

டீக்கடை டிப்ஸ்

இந்த நாட்டில் வேலை செய்யக் கிடைத்தால் அதிர்ஸ்டம்தான்

பல நாடுகள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துவதில்லை எனினும் சில நாடுகளின் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் மிகுந்த கரிசனை காண்பித்துக்கொள்ளும். அந்த வகையில் தென்கொரிய அரசாங்கம் பணியாளாகளின் நலனை உறுதி செய்ய புதிய சட்டமொன்றை

இந்தியச் செய்தி

ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றினார் கமல் – சென்னை

சென்னை தியாகராயநகரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம். காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண்மை மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் தமிழகத்தில் புதிதாக சிற்றணை, தடுப்பணைகள் கட்ட வேண்டும் இந்த கூட்டத்திற்கு ரஜினிகாந்த் வருவதாக இருந்தது