இன்று நடைபெற்ற பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமண புகைப்படங்கள் ..! உங்களுக்காக ….!

இன்று நடைபெற்ற பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமண புகைப்படங்கள் ..! உங்களுக்காக ….!

பொதுவாக திருமணங்கள் வரவேற்கப் படுகின்ற விடயம் தான் அதிலும் ராஜ பரம்பரை திருமணம் என்றால் சொல்லவும் வேண்டுமா .? இன்று கொண்டாட ஹரி, மெர்கல் திருமணம் அனைவர் கவனத்தை ஈர்த்தது. பிரித்தானிய இளவரசர்ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம், விண்ட்சோர் நகரில் மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

பிரித்தானிய இளவரசர்சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹரிக்கும்(33), நடிகை மேகன் மெர்க்கலுக்கும்(36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம்நடைபெற்றது.
இந்த திருமணத்திற்காக கோலாகலமான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.

லண்டனில் உள்ள ஏஞ்சலிகன்தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
மணமகள்மேகன் மெர்க்கலின் தந்தைக்கு இருதய அறுவைசிகிச்சை நடந்ததால், அவருக்குபதிலாக ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மேகனுக்கு தந்தைஸ்தானத்தில் இருந்து திருமணத்தைநடத்தி வைத்தார்.

இந்த திருமண விழாவிற்கு 600 விருந்தினர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அத்துடன் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் திருமணத்தைக்காண திடலில் வசதி செய்யப்பட்டது.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிதொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முதன்முதலாக திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் ஆவர்.
இந்த திருமணத்தைக் காண சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதையில் இடம்பிடித்து காத்திருந்தனர்.

அரசகுடும்பத்தினர் விண்ட்சோர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.25 மணியளவில் வர தொடங்கினர். இளவரசர் வில்லியம் மற்றும்மணமகன் ஹரி ஆகியோர் 11.40 மணியளவிலும், பிரித்தானிய ராணி எலிசபெத் 11.52 மணியளவில் தேவாலயத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மணமகள்மேகன் மெர்க்கல் சரியாக 12 மணிக்கு காரில் வந்து இறங்கினார். அதன் பின்னர், இசைக்குழுவினரின் பிராத்தனை பாடல்களுடன் திருமணமடல் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
பின்னர், இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பைபரிமாறினர். திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

ஊர்வலம் சென்றபோது சாலைகளின் ஓரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமணவாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர். உலகில் உள்ள 80 கோடி பேர் இவர்களது திருமணத்தை தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் ..! ஒரே பதிவில் உங்களுக்காக..! அதிகம் பகிருங்கள் ..!
Next நடிகர் விஜய் மேல் வேண்டும் என்றே முட்டை வீசி உடைத்த பிரபல நடிகர்..! விஜயின் பதில்..!

About author

You might also like

உலகச் செய்தி

கோகோ – கோலா வின் அடுத்த முயற்சி. அழிவு பெண்களுக்கு..! பகிருங்கள் அனைவரும் அறிந்து உஷாராகட்டும்..!

கோகோ கோலா பொதுவாகவே எம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது அனைவரும் அறிந்தது தான் ஆனாலும் அதை விட்டு வைப்பதாக இல்லை நாம் காரணம் அதன் சுவை. ஏற்கனவே அதில் போதையாகி இருக்கும் எமக்கு அவர்களே வேறாக கோகோ கோலா மதுபானத்தையும்

உலகச் செய்தி

மியன்மாரின் மீண்டும் கலவரம் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 19 !

மியன்மார் நாட்டு இராணுவத்திற்கும் ”டாங் தேசிய விடுதலை இராணுவம்” Ta’ang National Liberation Army (TNLA) என்ற கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது இதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5

உலகச் செய்தி

அண்ணன் தம்பிகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்களை திருமணம் செய்த பெண்…! திடுக்கிடும் காரணம்..!

பெண்களுக்கும் மறு வாழ்வு வேண்டும் தான் . இது தவறு என்று சொல்ல முடியாது ஆனால் குறிப்பிட்ட வயதில் பெண்ணுக்கு பொருத்தமானவருடன் திருமணம் செய்து வைக்கலாம் . அப்படி வைத்தால் இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வழி கிடைக்கும்..! ஆப்கானிஸ்தானை