மலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின ! மக்கள் அல்லோலகல்லோலம் !

மலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின ! மக்கள் அல்லோலகல்லோலம் !


மலையகத்தில் சீரற்ற காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு , வீடுகள் சேதம்!

மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்றகால நிலையினால் பொது மக்களின்இயல்பு வாழ்க்கைபாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்டதொழிலாளர்களின் தொழில்துறையும்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையல் நீரேந்துபகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மலைநீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 21.05.2018 அன்று அதிகாலை முதல்திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை. நோட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கத்திலும் நீரின் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. பொகவந்தலாவ பொகவனை மற்றும் கொட்டியாகலை சிலபகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன

இதேவேளை நோர்வூட் பகுதியில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன்காரணமாக நோர்வூட் பகுதியில் 05 வீடுகள்நீரில் முழ்கியுள்ளன. இதேவேளை அட்டன்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வருகைகுறைவாக காணப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவுதோட்ட ஆலயம் ஒன்றும் நீரில் மூழ்கிகாணப்படுகின்றது.


அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ளஅல்டோரியா தோட்டத்தில் மண்மேடுசரிந்து வீழ்ந்ததில் வீடுகள் இரண்டு முற்றாக சேதமாகியுள்ளதாகஅக்கரப்பத்தனை பொலிஸார்தெரிவித்தனர்.

21.05.2018 அன்று திங்கட்கிழமைஅதிகாலை 03 மணியளவில் இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட இரண்டுகுடும்பங்களை சேர்ந்த பத்து பேர்அல்டோரியா தோட்ட பொது நூலகத்தில்பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் மண்சரிவுகள்ஏற்படக்கூடிய தோற்றம் காணப்படுவதால்இப்பகுதியில் காணப்படும் ஏனையகுடியிருப்பாளர்களையும் அவதானத்தோடுஇருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

மண்மேடு சரிந்து பாதிக்கப்பட்டுள்ளவீடுகளின் உடமைகள் சேதத்திற்குஉள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சலுகைகளை அப்பகுதி கிராமசேவகர் ஊடாகவும் தோட்ட நிர்வாகத்தினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மழையுடன் கூடிய பனி மூட்டம் நிறைந்த காலநிலையில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பிரதான பாதைகளில் மழை நீர் அடித்துச் செல்வதனால்பாதையில் வலுக்கல் தன்மைகாணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகள்அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாரும், அதிக மழையினால் நீரேந்தும் பகுதிகளில் குடியிருப்போர் அவதானத்துடன் இருக்குமாரும் அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous உயிர் தோழியை நம்பி கூட வைத்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..! காதல் இத்தனை கேவலமா.?
Next கொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்...!

About author

You might also like

இலங்கைச் செய்தி

காதலெனும் பெயரால் அப்பாவி இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் பெற்றோர்..!

காதல் எத்தனை கொடுமையானது என்றால் கண்மூடித்தனமாக வந்து பல உயிர்களை காவு கொள்கிறது என்று சொல்லலாம் . அப்படி காவு கொள்ளப்பட்ட அப்பாவி பெண் தான் இந்த இளம் பெண்ணும் . எல்பிட்டி – ஊருகஸ் சந்தி பகுதியில் யுவதி ஒருவரின்

இலங்கைச் செய்தி

இன்று இலங்கைக்கு செல்ல இருந்த இளைஞன் பரிதாமாக மரணம் ..! கதறி துடிக்கும் உறவுகள்…!

இது விதியா இறைவனின் சதியா என்பது தெரியாது உள்ளது . அட ஆமாங்க கனவுகளோடு பறக்க நினைத்தவன் மண்ணுக்குள் புதைக்கப்படபோகும் கொடூரம் .! இதெல்லாம் இறைவனை திட்டித் தீர்ப்பதை தவிற வேறு வழி இல்லை . பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை வர

இலங்கைச் செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றவர்களுக்கு இராணுவம் கொடுத்த குளிர்பானத்தில் மருந்து கலப்பு..! பலர் வைத்தியசாலையில்..!

மே 18 நினைவேந்தல் தினத்தன்று பொதுமக்களுக்கு இரானுவத்தினரால் வழங்கப்பட்ட குளிபானத்தை அருந்தியவர்கள் சாவகச்சேரி மற்றும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைகளில் பலர் மருந்து எடுத்துள்ளனர். அப்போது தான் இராணுவத்தினர் வழங்கிய பானத்தில் உடம்புக்கு ஒத்துவராத மருந்து சிறிதளவு கலந்ததன் விளைவு