மத்தி எனும் இந்த மீன் பிரியரா நீங்கள்..? அப்படியானால் இதை கட்டாயம் படியுங்கள்..!

மத்தி எனும் இந்த மீன் பிரியரா நீங்கள்..? அப்படியானால் இதை கட்டாயம் படியுங்கள்..!

பொதுவாகவே மீன் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக சிலர் இந்த மீனை விரும்பி சாப்பிடுவார்கள்..!
தமிழகத்தில் அதிகளவு கிடைக்கும் மீன்களில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து மீனில் அதிகம் உள்ளது.

மத்தி மீன்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ‘ஒமேகா 3‘ கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 337 குடும்பங்களும் 1336 பேரும் நிர்கதியாகியுள்ளனர் ! மலையகத்தில் சம்பவம்!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

40 ஆண்டுகளின் பின்னர் சவூதியில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன

40 ஆண்டுகளின் பின்னர் சவூதி அரேபியாவில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள

டீக்கடை டிப்ஸ்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன்

டீக்கடை டிப்ஸ்

பின்லாந்து மக்களே உலகில் அதிகளவு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் மிகவும் சந்தோசமான நாடாக பின்லாந்து இந்த ஆண்டு தர வரிசையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகின் மகி;ழ்ச்சியான