தமிழரின் உதிரத்திற்கு கிடைத்த வெற்றி..!ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர தடை..!

தமிழரின் உதிரத்திற்கு கிடைத்த வெற்றி..!ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர தடை..!

பல தமிழர்கள் தங்கள் உயிர்களை பயணம் வைத்து எதிர்கால சந்ததிகளுக்காக போராடி 13க்கு மேற்பட்ட உயிர்களையும் குடித்த போராட்டம் தான் ஸ்டெர்லைட் .

தூத்துக்குடி என்றாலே இனி எம் நினைவை விட்டு போகாத ஒரு கொடுமையின் உச்சம். இன்னுமொரு இன அழிப்பு என்று கூட சொல்லலாம் .இந்த நிலையில் மகிழ்ச்சியான செய்தியாய் இருப்பது இது தான். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும்இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிதெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆலைஇயங்க அனுமதியளிக்க மாட்டோம் என்று ஒரு அரசாணையே வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலை தற்போது முழுவதும் மூடப்பட்டுள்ளதாகவும், ஆலைக்கு மின்சாரம் மற்றும்குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயல்பு நிலை திரும்பிய பின் முடக்கப்பட்ட இணையதள சேவை மீண்டும்வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததோடு, ஏற்கனவே ஆலை பெற்றுள்ள அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டு ஆலைமீண்டும் இயங்காமல் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள வங்கி அதிகாரிகளிடம் மக்கள் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகக் கூறி வங்கிகளையும் ATM- களையும் திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், எரிபொருள் விற்பனைநிலையங்களையும் திறக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர் பெரும்பாலும் சகஜ நிலை திரும்பி விட்டதாகவும் ஓரிரு நாட்களில்முழுவதும் சகஜ நிலை திரும்பி விடும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next கர்பிணியின் மர்ம பிரதேசத்தில் கொடூரர்கள் செய்த கொடுமை...! இப்படியும் மிருகங்களா.?

About author

You might also like

இந்தியச் செய்தி

ஏழு வயது சிறுமி ஏழு மணித்தியாலங்களாக தந்தையின் உயிர் காக்க குழுகோசை கையில் ஏந்தி நின்ற பரிதாபம் ..! இப்படியும் மிருகங்கள் ..!

உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தந்தையின் உயிரை காக்க 7 வயது சிறுமி 7 மணிக்கும் அதிகமான நேரம் தன் கையால் குளுக்கோஸ் பாட்டிலை ஏந்தி நின்ற பரிதாபம் மஹாராஷ்ட்டிர மானிலத்தில் நடந்துள்ளது   ஒரு டிரிப் (drip

இந்தியச் செய்தி

ஆலைக்கு மின்சாரம் இணைய சேவை என்பன துண்டிப்பு !… ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அறிவுறுத்தல்..

பதற்றமான சூழல் நிலவுவதால் ஆலைக்கு வர வேண்டாம் – நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவுறுத்தல் ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளில் உள்ளவர்களை சொந்த ஊர்களுக்கு திரும்ப உத்தரவு இணைய சேவை துண்டிப்பால், ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்த அரசின்

இந்தியச் செய்தி

மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்..! மனைவிக்கு கணவன் கண்முன் நடந்த கொடூரம்..!

“சூது” இன்று நேற்றல்ல வரலாறு தொற்று வருகிறது. அதிலும் மனைவியை வைத்தே சூதாடி இருந்தார்கள். கலிகாலத்திலும் இதே இடம்பெற்றுள்ளது ஆனால் கொடூரமாக . ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடிய நபர் அதில் தோற்றுவிட்டதால், மனைவியை பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு