உயிர் போகும் தலை வலியா.? இதோ ஒரு நொடியில் தீர்வு ..! அதிகம் பகிருங்கள்..!

உயிர் போகும் தலை வலியா.? இதோ ஒரு நொடியில் தீர்வு ..! அதிகம் பகிருங்கள்..!

தலை வலி உயிர் போகும் கண்ட கண்ட மருந்து எல்லாம் எடுப்போம் . ஆனாலும் சரி வராது . ஏன் கஷ்டம் இத முயற்சித்து பாருங்களேன் . தலைவலிக்கு 10 பாட்டி வைத்தியம்.

கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த‌லைவ‌லி குறையும்.
முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
# அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவிவரலாம்.
# சுக்குத் தூள், சீந்தில் கொடி, தேன் சர்க்கரை ஆகியவற்றை வகைக்குக் கொஞ்சம் எடுத்துத் துணியில் முடித்து மூக்கில் முகர்ந்து வரலாம்.

# குளிர்ந்த நீரைத் துண்டில் நனைத்துத் தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலன் தரும்.
# தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக்கொள்ள வேண்டும்.
# நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.
# பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம்.

# ஜாதிக்காய் உறையைக் கல்லில் உரைத்து அதை எடுத்து இரு பக்க நெற்றிப் பொட்டிலும் கனமாகப் பற்றுப் போடலாம்.
# நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத் தூளாக்கிச் சிட்டிகை அளவு எடுத்து நாசியில் வைத்து முகரத் துர்நீர் பாய்ந்து வந்து தலைவலியைப் போக்கும்.
# வில்வ இலைகளை அம்மியில் அரைத்துத் தினமும் சுண்டைக்காய் அளவு 20 நாட்கள் சாப்பிடலாம்.
# இரண்டு துளி வெற்றிலைச் சாறு மூக்கில் விடலாம்.
# மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி நின்றுவிடும். இது கை கண்ட அனுபவ முறை.
# வெள்ளை எள்ளை, எருமைப் பால் சேர்த்து அரைத்தெடுத்து அதிகாலையில் முன் நெற்றியில் பற்று போட்டு உதயசூரியன் ஒளியில் லேசாகக் காட்டிவரலாம்.

வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும். கிராம்பை தூள் செய்து அதனை வெற்றிலை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்..! மனைவிக்கு கணவன் கண்முன் நடந்த கொடூரம்..!
Next துடிக்க துடிக்க அழகிய மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

About author

You might also like

மருத்துவம்

அடடா இது தெரியாமல் போயிற்றே?

மனிதனின் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு போதுமான அளவில் செம்புச் சத்து கிடைப்பதனால், தீர்வு கிடைக்கின்றது. பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை

மருத்துவம்

ஆண்மையை அதிகரிக்கப் பயன்படும் பப்பாளி விதை

ஆண்மையை அதிகரித்துக் கொள்வதற்கு பப்பாளி விதைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், வாழ்;க்கை முறைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆண்மை குறைவு ஏற்படுகின்றது. அதிகளவு செலவு செய்யாது, ஆண்மைப் பிரச்சினைக்கு மிகவும் எளிய

மருத்துவம்

மல்லிகையை இதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமா

மல்லிகைப் பூ என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கடவுளுக்கு அல்லது பெண்களுக்கு சூடுவதற்காக என்பது மட்டுமேயாகும், எனினும் மல்லிகைப் பூவில் அத்தனை மருத்துவ நலன்கள் காணப்படுகின்றன. வானவில் நேயர்களுக்காக நாம் மல்லிகையின் மகத்துவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். மருத்துவ குணம் கொண்ட