தேங்காய் தண்ணீர் தொடர்ந்து 7 நாள் குடித்தால் கடுமையான இந்த நோய்கள் கூட குணமாகிறதாம் ..! படித்து அதிகம் பகிருங்கள்..!

தேங்காய் தண்ணீர் தொடர்ந்து 7 நாள் குடித்தால் கடுமையான இந்த நோய்கள் கூட குணமாகிறதாம் ..! படித்து அதிகம் பகிருங்கள்..!

தேங்காய் உடைத்ததும் சிறு வயதில் நாம் ஆசையாக தேங்காய் தண்ணீர் குடிப்பதுண்டு . ஆனால் இப்போது அது மாறிவிட்டது. ஆனால் அன்று நாம் தெரியாமல் குடித்த தேங்காய் தண்ணீரில் எத்தனை இருக்கு தெரியுமா.? இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.
அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

1. நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
2. தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்

3. சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்று வதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
4. செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

5. எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
6. உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

7. தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
8. நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

9. கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : பாட்டி மருத்துவம்.

Previous கையில்(விரலில்) எந்த இடத்தில் அழுத்தினால் என்ன நோய் குணமாகும் .!? இதோ உங்களுக்காக.நீங்களும் பயன்பெற்று நண்பர்களும் பெயன் பெற பகிருங்கள்..!
Next நடிகர் அஜித் இப்படி செய்வார் என நினைக்கவில்லை ..! பிரபல நடிகர் பேட்டி ..!

About author

You might also like

மருத்துவம்

மிகவும் கடினமான ஒட்டுமொத்த சரும நோய்களுக்கும் நொடியில் தீர்வு இதோ…!

மிகவும் கடினமாக தோள் நோய்களுக்கு நொடியில் தீர்வு இதோ…! பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு

மருத்துவம்

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி எமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை அகற்றுவதற்கு சுலபமான வழிகள் இயற்கை மருத்துவ முறைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. மனித உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய தங்கி இருக்கும் அதுவே உடல் எடை

மருத்துவம்

நினைவாற்றலை எவ்வாறு அதிகரிப்பது?

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒருமுக்படுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின்