பெண்கள் தவறான ப்ரா (உள்ளாடை) அணிவதால் ஏற்படும் விளைவுகள்…!  ஆபாசம் அல்ல அவசியமானது . பெண்கள் கண்டிப்பாக படியுங்கள்…!

பெண்கள் தவறான ப்ரா (உள்ளாடை) அணிவதால் ஏற்படும் விளைவுகள்…! ஆபாசம் அல்ல அவசியமானது . பெண்கள் கண்டிப்பாக படியுங்கள்…!

அன்றாடம் பெண்கள் அணியும் பிரா சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பிரா பெண்களின் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தற்போது ஏராளமான ஃபேன்ஸி பிராக்கள் வந்துள்ளன.

இந்த ஃபேன்ஸி பிராக்களை வாங்க அனைத்து பெண்களுக்குமே விருப்பம் இருக்கும்.
ஆனால் அணியும் பிராவை தேர்ந்தெடுத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பிராவானது மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக்கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.
மார்பக வலி
பொருத்தமான பிராவை அணியாவிட்டால் சந்திக்கும் விளைவுகளுள் ஒன்று மார்பக வலி. அதுவும் அணியும் பிரா மிகவும் சிறியதாக இருந்தால், மார்பக வலியை உணரக்கூடும். நீங்கள் சிறிய அளவிலான பிராவை வாங்கினால், அதனால் மார்பகங்கள் இறுக்கத்துடன் மற்றும் மிகவும் அழுத்ததுடன் இருந்து, மார்பக வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.
முதுகு வலி

பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தவறான அளவிலான பிராவை அணிந்தால் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முதுகு வலி. ஏற்கனவே மார்பகங்கள் பெரிய அளவில் இருக்கும் போது, சிறிய அளவிலான பிராவை அணியும் போது, மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் அதிகளவிலான பாரம் இருப்பது போன்று உணரக்கூடும். இதனால் இடப்பு மற்றும் முதுகுப் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். ஆகவே உங்களுக்கு பிரா மிகவும் இறுக்கமாக சிறியதாக இருப்பது போன்று உணர்ந்தால், உடனே பிராவை மாற்றுங்கள்.
தோள்பட்டை வலி

சிறிய அளவிலான பிரா அணிவதால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தோள்பட்டை வலி. அதோடு ஒருவர் மிகவும் சிறிய அளவில் பிரா அணியும் போது, தோள்பட்டையில் வலிமிக்க சிவப்பு நிற குறி ஏற்படும், சில சமயங்களில் அவ்விடத்தில் லேசான வெடிப்புக்கள் கூட ஏற்படலாம். ஆகவே எப்போதும் சரியான பிராவை வாங்கி அணியுங்கள்.
கழுத்து வலி

சில நேரங்களில் தவறான பிராவை தேர்ந்தெடுத்து அணியும் போது, தோள்பட்டை வலியுடன், கழுத்து வலியையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஒருவர் நீண்ட நாட்கள் தவறான பிராவை அணிந்தால், தொடர்ச்சியான கழுத்து வலியால் மிகுதியாக கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே உங்களுக்கு திடீரென்று புது பிராவை அணிந்த பின் கழுத்து வலி வந்தால், நிலைமை மோசமாவதற்குள் பிராவை மாற்றிவிடுங்கள்.

தொங்கும் மார்பகம்
பிராவை அணிவதன் நோக்கம் மார்பகங்கள் நல்ல வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால் தவறான மற்றும் தளர்வான பிராவை அணிந்தால், அது மார்பகங்களுக்கு உறுதுணையாக இல்லாமல் இருக்கும். இந்நிலையில் சரியான அளவிலான பிராவைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அதோடு ஒருவர் தளர்வான பிராவை அணிந்தால், அதனால் மார்பகங்கள் தளர்ந்து தொங்க ஆரம்பித்து, அசிங்கமாக காட்சியளிக்கும்.
நிணநீர் முடிச்சு அடைப்பு
மார்பகங்களில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் மிகவும் சிறிய அளவில், சென்டிவ்வாக மற்றும் எளிதில் சுருங்கி விரியும் அளவில் இருக்கும். இந்நிலையில் சிறிய அளவிலான பிராவை அணியும் போது, அதனால் மார்பகங்களில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் மற்றும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும். அதிலும் ஒரு பெண் சிறிய அளவு கப் கொண்ட பிராவை அணியும் போது, நிணநீர் முடிச்சுக்கள் பெரிதாக பாதிக்கப்படும். எனவே சரியான கப் கொண்ட பிராவைப் பார்த்து வாங்குங்கள்.
நிலையை மோசமாக்கும்
தவறான அளவிலான பிரா ஒருவரது நிலையை மோசமாக்கும். அதாவது இம்மாதிரியான பிரா தொடர்ச்சியாக கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலியைக் கொடுக்கும். மேலும் இம்மாதிரியான வலிகளால் நாம் சற்று குனிந்து உட்கார நேரிடும். இதனால் கூன் விழுந்தது போன்று காட்சியளிக்கும். ஆகவே எப்போதுமே பொருத்தமான பிராவை வாங்கி அணியுங்கள்.

தோல் சிராய்ப்புகள்
ஒரு பெண்கள் சிறிய அளவிலான பிராவை அணியும் போது, மார்பக பகுதியைச் சுற்றி மற்றும் தோள்பட்டை பகுதியில் இரத்தம் வருவது போன்ற வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படியே தவறான பிராவை அணிந்தால், அதனால் மிகவும் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். எனவே உடனே இந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்தால் பிராவை மாற்றுங்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி .namadhu TV .

Previous உயிரை பறிக்கும் சீனி இனி வேண்டாம் ..! முன்னோரின் கருப்பட்டி போதும். படித்து பாருங்கள் புரியும்....!
Next தமிழ் பிக் பாஸ் 2 வீட்டுக்கு என்னையும் அனுப்புங்கள் கெஞ்சும் நடிகை..! அனுப்புவார்களா..?

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் . இனி அப்படி வாங்காதீர்கள்

டீக்கடை டிப்ஸ்

ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!

இதெல்லாம் என்ன சொல்வது என்று தெரியவே இல்லை . ஏன் இப்படி பெண்கள் ஏமாறுகிறார்கள் .? எத்தனை செய்திகள் பார்த்தாலும் கேட்பதாக இல்லை . மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம். தயவு செய்து திருந்துங்கள் ..! ஃபேஸ்புக் காதல்.. முற்றுலும் பொய்

டீக்கடை டிப்ஸ்

சில அறுவெருப்பான விடயங்கள் தான் அதிசயம்..! இது என்ன தெரியுமா நீங்களே படியுங்கள்..!

உலகில் சில விடயங்கள் வித்தியாசமானது . சொன்னால் நம்பவா போறீங்க ஆனாலும் இத நம்ப தான் வேண்டும். சில அறுவெருப்பான விடயங்கள் கூட அதிசயம் தான் . பாருங்கள் புரியும்..! கற்றது கை அளவு, அறியாதது கடல் அளவு என்பார்கள். இது