இதை படியுங்கள். இனி இந்து உப்பு தான் பாவிப்பீர்கள் . எத்தனை நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்று பாருங்கள்…!

இதை படியுங்கள். இனி இந்து உப்பு தான் பாவிப்பீர்கள் . எத்தனை நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்று பாருங்கள்…!

கடல் நீரிலிருந்து தயாராகும் உப்பை, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தி வருகிறோம். உப்பை கல் உப்பு, தூள் உப்பு எனப்பலவிதங்களில் பயன்படுத்தினாலும், அவை அனைத்தின் பலன்களும் ஒன்றுதான்.

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்பதற்கேற்ப, கரிப்பு சுவைக்காகவும், கார வகை உணவுகளில் சுவை கூட்டவும் உப்பு பயனாகிறது.
சமீப காலங்களில் கடல் உப்பை தினசரி பயன்படுத்துவதால், சிலருக்கு தைராய்டு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும் தன்மைகள் இருப்பதாக மேலை நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து, அதைப்போக்க அயோடினை கடல் உப்பில் கலக்க பரிந்துரைத்து, அதையே, முழுமூச்சாக நமது தேசத்திலும் பின்பற்றி, அயோடின் கலக்காத உப்பை, மக்கள் பயன்படுத்தத்தடை விதித்துள்ளனர்.

உலகளவில் இந்த தைராய்ட் பாதிப்புகள் உள்ள இரண்டு சதவீதம் பேருக்காக, அனைவரும் வெறும் உப்பை பயன்படுத்த தடைசெய்துள்ளனர். மேலும், உப்பு ஆலைகளில், ஆய்வில் உப்பில் அயோடின் அளவு குறைந்தால், ஏற்படும் அபராதத்தைத் தவிர்க்க, அயோடின் அளவை உப்பில் அதிகரித்து, மக்கள் உடல்நலனில் அக்கறை இன்றி விற்பனை செய்கின்றனர்.

கூடுதல் அளவுகளில் அயோடின் உள்ள நமது அன்றாட பயன்பாட்டு உப்பு, மேலும் அதிக இன்னலை நமக்கு அளிக்கும் என்பதே, உண்மை. சரி, எப்படி இந்த அயோடின் விசயங்களைத் தவிர்த்து, நாம் உப்பை பயன்படுத்துவது.
இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை, ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயன் உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம்.
மிகத்தொன்மையான காலத்திலிருந்து, நம் முன்னோர் சமையலில் இடம்பெற்றுவந்த இந்துப்பு காலப்போக்கில், பயன்பாட்டிலிருந்து, விலகிவிட்டது.
இந்துப்பு என்றால் என்ன?
உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை, சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற உடையும்தன்மைமிக்கவையாகக் காணப்படுகின்றன.

அவையே உப்புப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு எனும் இந்துப்பாகும். நமது நாட்டின் இமயமலைத்தொடரின் அருகில் உள்ள உப்புமலைகளிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலிருந்தும் உப்புப்பாறைகள் நமக்கு கிடைக்கின்றன.
இராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாறை உப்பு, பூமிக்கு அடியில் இருந்து, சுரங்கங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி போன்ற சில இடங்களில், கிடைகிறது.

உலக நாகரீகங்களில் முதன்மையானதாகக் கருதப்படும், நைல் நதி நாகரீகம் எனும் எகிப்திய நாகரீகம் அக்காலத்தில் சிறந்து விளங்கியதற்கு காரணமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது, அவர்களின் இயற்கை உப்பு வளமேயாகும்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், அதுதான் உண்மை. அங்குள்ள பாலைவன நிலங்களில் இயற்கையாகக் கிடைத்த இந்துப்பை அவர்கள் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று விற்று வணிகம் செய்து, பொருளாதார வளம் பெற்றனர்.

அதனால், உண்டான அதீத செல்வச் செழிப்பினால், அவர்களின் வாழ்க்கை நவ நாகரீகமிக்கதாக மாறி, உலக நாடுகளுக்கெல்லாம், முன்னோடியாக எகிப்தியர் விளங்கினர், என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்துப்பில் உள்ள தாதுக்கள்
பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பு, நல்ல நீர் மற்றும் இளநீரில் ஊறவைத்து, பதப்படுத்தப்பட்டபிறகே, நமக்கு பயன்படுத்தக்கிடைக்கிறது.
சற்றே மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது.
மனிதருக்கு நலம் தரும் 80 [எண்பது] வகையான கனிமத்தாதுக்களை, தன்னகத்தே கொண்டது. வட இந்தியர்கள், சிவ ராத்திரி போன்ற விரத நாட்களில், இந்துப்பைகொண்ட உணவுகள் தயாரித்து சாப்பிட்டு விரதம் முடிப்பர். அன்றாட உணவிலும் இந்துப்பை வட இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்துப்பின் பயன்பாடு அவற்றின் நன்மைகள் குறித்து, தமிழ்நாட்டில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை, ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமைவாய்ந்த தமிழ் சித்த மருத்துவத்தில், முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட வியாதிகள் போக்கும் மருந்துகள் தயாரிப்பில், மனிதருக்கு நலம் தரும் இயற்கை தாதுக்கள் நிரம்பிய இந்துப்பும் சேர்க்கப்பட்டது.

இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது, மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது.
அயோடின்
சமீப காலங்களில், அதிகக் கொழுப்பு உள்ள நாட்டு எண்ணைகளை பயன்படுத்தினால், ஹார்ட் அட்டாக் போன்ற இதய பாதிப்புகளை உண்டாக்கும், எனவே, சுத்திகரித்து கொழுப்பு நீக்கப்பட்ட ரீபைண்ட் எண்ணைகளை உபயோகிக்க சொன்னார்கள்.
தேங்காய் உணவில் சேர்த்தால், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அது ஆகாது என்றார்கள். பிறகு கடல் உப்பை உணவில் சேர்ப்பதால் தைராய்ட் பாதிப்பு வருகிறது என்று சொல்லி, அயோடின் சேர்த்து உப்பை பயன்படுத்தக் கூறினார்கள்.

வெகு சிலருக்கு தைராய்டு பாதிப்புகள் வராமலிருக்க, எல்லோரும் பயன்படுத்தும் கல் உப்பில், அதிக அளவில் அயோடின் சேர்ப்பதால், அதனால் மற்றவர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து, எந்த ஆய்வுகளும் எச்சரிக்கவில்லை என்பதன்மூலம், உப்பில் அயோடின் சேர்க்கச்சொல்லிய, பன்னாட்டு ஆய்வுகளின் ஒருதலைப்பட்சமான முடிவுகளை, நாம் அறியமுடியும்.
இவற்றைக்கூர்ந்து கவனித்தால், நம்முடைய நாட்டு எண்ணைகள், கல் உப்பு வெல்லம், கருப்பட்டி, நாட்டுப்பசு பால்,நெய், இயற்கை உரத்தின் மூலம் விளைவிக்கும் நெல், தானிய வகைகள் உள்ளிட்ட பாரம்பரிய இயற்கையான தயாரிப்புப்பொருட்களை அழித்தால்தான், மேலை வகை உணவுப்பொருட்கள் சுலபமாக மிகப்பெரிய வணிகச்சந்தையான, இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முடியும், என்ற நச்சு எண்ணங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்று, நாம் அறியமுடியும்.
பன்னாட்டு வணிக ஒப்பந்தங்கள் மூலம் உண்டான உலகமயமாக்கலுக்கு நாம், கொடுத்த விலைதான், நமது பாரம்பரியமான உணவுப்பொருட்களை அழிக்கும் இதுபோன்ற அந்நிய முயற்சிகள்.
இவற்றை நாம் எதிர்த்து, இந்த பொருட்களின் தீமைகளைப்பற்றி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி, மேலைஉணவுப்பொருட்களைப் புறக்கணித்து, இயற்கைவழி பாரம்பரியம் மாறாமல், உடல்நலனுக்கு ஊறு விளைவிக்காத, இயற்கை விளைபொருட்களை, அன்றாட உபயோகத்தில், அனைவரும் பயன்படுத்தத்தூண்டுவதனால் மட்டுமே, நாம் இந்த பன்னாட்டு வணிக படையெடுப்பை முறியடிக்க முடியும்..

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி: வாட்சப் குரூப்.

Previous கொலை வழக்கில் பிரபல நடிகர் அதிரடி கைது. சென்னையில் பரபரப்பு...!
Next மரண அறிவித்தல் அம்பலவாணர் நடராஜா (CTB)

About author

You might also like

மருத்துவம்

வெற்றிலை பற்றி நம்மில் பலருக்குத் தெரியாத விடயங்கள்…

வெற்றிலை எமது கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஓர் விடயம் என்ற போதிலும் அதன் மருத்துவ நலன்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது, வாருங்கள் வெற்றிலையின் மகிமை பற்றி அறிந்து கொள்வோம். வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலையை எந்த முறையில் சாப்பிட்டால்

மருத்துவம்

ஊறவைத்த 2 கரண்டி வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.. இந்த நோய்களுக்கு உடனடி தீர்வு..!

வெந்தயம் பற்றி எம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்துகொள்ள முயற்சிப்பது இல்லை . ஆனால் தெரிந்துகொள்ளுங்கள் . “வெந்தயம்” இரவில் ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அப்படியே

மருத்துவம்

இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்…!

சில விடயங்கள் எங்களுக்கு அன்றாடம் நடக்கும் ஆனால் நாம் கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் அது தான் ஆபத்து என்பது தெரிவதில்லை . உங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள். நரம்பு பாதிப்பு என்று வரும் போது, முதலில்