இரண்டு முறை இறுதிக் கிரியைகள். ஆனால் இன்னும் மரணிக்காத குழந்தை…!உறவுகளே பிராத்தியுங்கள்…!

இரண்டு முறை இறுதிக் கிரியைகள். ஆனால் இன்னும் மரணிக்காத குழந்தை…!உறவுகளே பிராத்தியுங்கள்…!

இது இறைவனின் செயலா.? ஏன் இப்படி நடக்கிறது ..வைத்தியர்களின் கவனக் குறைவாக இருக்கிறதா.? எந்த வழியில் சிந்திந்தாலும் எதுவும் பிடிப்படுவதாக இல்லை. உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும்இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில்,
சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும்எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள இரண்டு வயது சிறுமி ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 15ம் திகதிதெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று சிறுமிக்கு இறுதி கிரியைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், சிறுமியின் உடலில் இருந்து திடீரென சிறுநீர் மற்றும் மலம் என்பன வெளியாகியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கொண்டு சென்ற நிலையில், உறவினர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், குறித்த குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்து மீண்டும்இன்று இறுதி கிரியைகள் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், குழந்தையின் நாடித்துடிப்புஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி கிரியைகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுமியின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறியுள்ளதுடன், சளி மற்றும் வியர்வையும் வெளியேறியுள்ளது.
எவ்வாறாயினும், சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்று நாட்களை கடந்துள்ள போதிலும், உயிரிழந்தவர்களுக்கு உடலியல்ரீதியாக ஏற்படும் எந்த மாற்றமும் சிறுமிக்கு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுமி உயிருடன் இருப்பதாக முழுமையாக நம்பும் உறவினர்கள், சிறுமி விரைவில் நலம்பெற வேண்டும் என இறை பிரார்த்தனையில்,ஈடுபட்டுள்ளனர். சிறுமி நலன் பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை நாமும் பிராத்திப்போம். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மாரடைப்புக்கு நொடியில் தீர்வு இதோ...! தயவு செய்து அதிகம் பகிருங்கள்..!
Next வீட்டுக்குள் இந்த இலையில் ஒன்றை தினமும் எரியுங்கள்...! அதன் பின் பாருங்கள்..!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

சவுதி பெண்கள் தொழில் துவங்க ஆண் அனுமதி தேவையில்லை

ரியாத்: ‘சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், தொழில் துவங்க, ஆண்களின் அனுமதி இனி தேவையில்லை’ என, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில், இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 01.05.2018 சித்திரை 18, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி காலை 06.48 வரை பின்பு தேய்பிறை துதியை. விசாகம் நட்சத்திரம் பகல் 03.56 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 03.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2.

நிமிடச் செய்திகள்

இத்தனை அழகாக இருக்கும் இந்திய பெண் அடுத்தவள் கணவனுக்காக அமெரிக்காவில் செய்த அசிங்கமான வேலையை பாருங்கள்…!

அடுத்தவரின் பொருட்களுக்கு ஆசை படுவதே தவறு இதில் அடுத்தவள் கணவருக்கு ஆசைபடலாமா..? படுறாங்க ஆசை பட்டதால் ஏற்பட்ட ஏற்பட்ட விபரீதம் தான் இது … காதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.