அரசியல்வாதிகளே ஏன் எங்களை கொடுமை படுத்துகிறீர்கள்..!? தவிக்கும் குடும்பத்தின் சகோதரிகள் கண்ணீர் பேட்டி.,.!

நிமிடச் செய்திகள்

இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகள் கையில் மைக் கிடைத்து விட்டால் பேச தொடங்கி விடுவார்கள். என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசுவார்கள் . அப்பிடி தான் இதுவும்..

கேரள மாணவி மாயமான விவகாரத்தில் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் தீங்கிழைக்க வேண்டாம் என அவரது சகோதரி உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெஸ்னா கடந்த மார்ச் 22 ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில் மாயமானார்.

அவரை தேடும் பணி முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக ஜெஸ்னாவின் சகோதரி ஜெய்ஸ் ஜான் ஜேம்ஸ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெஸ்னா மாயமானதற்கு அவரது தந்தையை விசாரிக்க வேண்டும் என பிரபல அரசியல்வாதி ஒருவர் கூறிய குற்றச்சாட்டு தங்களது குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளது என கூறும் அவர், உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தயவு செய்து உபத்திரவம் தராதீர்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எங்கள் குடும்பம் சகோதரியை இழந்து தவியாய் தவிக்கிறது நீங்களும் இப்படி செய்யாதோர்கள் .
ஜெஸ்னா மாயமாகி 77 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் பொலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தவறான குற்றச்சாட்டுகளால் விசாரணை தாமதப்படுகிறது. ஏன் எங்கள் குடும்பத்தார் மீது இத்தனை வன்மத்தை அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஊடகங்கள் வெளிப்படுத்துகிறது என தெரியவில்லை.
நாங்கள் என்ன மிருகங்களா? எங்கள் கண்ணீரை ஏன் கண்டுகொள்ளாமல் நடிக்கின்றீர்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்புகின்றோம்.எங்களுக்கு உரிய நீதியை நீதிமன்றம் வழங்கும் என்றும் ஜெய்ஸ் ஜான் ஜேம்ஸ் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.