77 வயது முதியவருடனான திருமண வாழ்க்கைய எல்லா விதத்திலும் மகிழ்ச்சியாய் இருகிறேன்” 16 வயது சிறுமியால் அதிர்ச்சி..!

நிமிடச் செய்திகள்

இந்த உலகமும் மக்களும் நாசமா போகட்டும் என்று சொல்லவே தோன்றுகிறது. எப்படியான மனிதர்களுடன் வாழ்கிறோம் பாருங்கள்..!

ஹைதராபாத்தைசேர்ந்த 16 வயது சிறுமி ஓமனை சேர்ந்த77 வயது முதியவரை மணந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாகஉள்ளதாக அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளார்.
ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது (77) என்ற முதியவர் கடந்தாண்டு ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியைவிலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தனது மகளை தனது கணவர், சகோதரிசேர்ந்து ஐந்து லட்ச ரூபாய்க்காக ஷேக்கிடம் விற்றுவிட்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஓமன் காவல்துறையினர் உதவியுடன் ஹைதராபாத்பொலிசார் விசாரணை நடத்தியதில் தான் ஷேக்குடன் மகிழ்ச்சியாகஇருப்பதாகவும், சொந்தநாட்டுக்கு திரும்ப விருப்பமில்லை எனவும் சிறுமி கூறினார்.

இந்நிலையில்மஸ்கட் தூதரகம்மூலம் சிறுமியை மீண்டும்மீட்க தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தூதரக அதிகாரிகள், ஓமன் அதிகாரிகளிடம் சிறுமியை விசாரிக்க கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கணவர் ஷேக்குடன்தான் எல்லா விதத்திலும்
மகிழ்ச்சியாகவாழ்வதாகவும், தன்னை பற்றி கவலை பட வேண்டாம் எனவும், கட்டாயத்தின் பெயரில் தான் வாழவில்லை எனவும், இந்தியாவுக்கு திரும்ப தனக்கு விருப்பமில்லை எனவும் சிறுமி கடிதம்எழுதி கொடுத்ததாக ஓமன் அதிகாரிகள் தூதரகஅதிகாரிகளிடம் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது பலருக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளங்களில் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதாவது ஒரு பேப்பரில் எழுதியதைவைத்து எப்படிஅது சிறுமியின் அறிக்கை என கூறுகிறார்கள். கண்டிப்பாக சிறுமியை கட்டாயப் படுத்தி எழுத வைத்திருக்க வேண்டும்
தனது தந்தையை விட வயது அதிகமானவருடன் சிறுமி மகிழ்ச்சியாகஎப்படி வாழமுடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையில் குழந்தை உரிமை ஆர்வலர் மற்றும் குழந்தை உரிமைகள் மாநிலஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் அச்சுதராவ் கூறுகையில், சட்டப்படி பார்த்தால் சிறுமியின் அறிக்கை என்பது செல்லாது.

இந்திய அதிகாரிகள் மைனர் சட்டம் குறித்து சரியாக தெரிந்துகொள்ள வேண்டும், சிறுமியை ஓமனிலிருந்து மீட்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.