வெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..! காரணம் இது தானாம்..!

இலங்கைச் செய்தி

இத்தாலி நாட்டுக்குள் செல்ல பல ஆயிரம் யூரோ வாங்கிய குற்றச் சாட்டின் பெயரில் பெண் உட்பட பலரும் கைது செய்யப் பட்டனர்..!

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில்இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
வெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..! காரணம் இது தானாம்..!
மேரிஅமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார்அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன்வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் எலோசியஸ் எல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாகும்.

சட்டவிரோதமாக இத்தாலியில் நுழைவதற்காக 28 ஆயிரம்யூரோ வரை செலுத்தும் நபர்களும் உள்ளதாகவும், போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும்சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையில் இருந்து இத்தாலிக்கு நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நடமாடும் குழுவினால் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக பலேர்மோ நீதிமன்றத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின்ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களின் புகைப்படங்களை இத்தாலி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.