இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 12-06-2018, வைகாசி 29, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 07.34 வரை பின்பு சதுர்த்தசி திதி பின்இரவு 04.34 வரை பின்பு அமாவாசை. கிருத்திகை நட்சத்திரம் மாலை 07.07 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 07.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். சிவராத்திரி. முருக-சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
6/12/2018
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
கடகம்
கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
சிம்மம்
சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
கன்னி
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
மகரம்
மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்
கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்
மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்...!
Next எச்சரிக்கை: பெருங்குடல் பாதிப்பு உயிரையும் பறிக்கும். இந்த அறிகுறிகள் இருக்கிறதா..?

About author

You might also like

நிமிடச் செய்திகள்

தாம்பத்தியமும் தாரமும்..! திருமணமானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்..!

அழகான ஒரு பதிவு..படித்ததில் பிடித்ததால் பகிர்கிறோம்..! இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..! ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்!!!* எழுபத்தைந்து வயதில்….. ஆதரவு இன்றி நிக்குது மனசு…

நிமிடச் செய்திகள்

விசாலமான பாலத்தை உருவாக்கி சீனா சாதனை

மிகவும் விசாலமான பாலம் ஒன்றை அமைத்து சீனா சாதனை படைத்துள்ளது. சீனா ஈபில் டவரை விட 60 மடங்கு அதிகமாக இரும்புகம்பிகளால் தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டி முடித்துள்ளது. சீனாவானது பயண நேரத்தை குறைப்பதற்காக தென்சீன நகரங்களான சுகாய்,

நிமிடச் செய்திகள்

தாய்வானுக்கு சீனா கடும் எச்சரிக்கை

பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட தாய்வானுக்கு அனுமதியில்லை என சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் பௌதீக ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சீனப் பிரதமர் லீ கியூகியாங் சீனப் பராளுமன்றில்