வீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்…!

வீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்…!

பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.

பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பணப்பெட்டி மற்றும் நகைப்பெட்டி : வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.

இயந்திரங்கள் வைக்க கூடாத இடம் : எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள். ஓட்டை குழாய் : வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள்.

இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும். பணப்பெட்டி முன் கண்ணாடி : பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும். அதிக செலவைக் குறைக்க : உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள். பச்சை நிறம் : வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
சோபா வைக்கும் திசை : வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும். வீட்டின் முன் கோயில் அல்லது பெரிய கட்டிடங்கள் கூடாது : நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டின் மையப் பகுதி : வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும். ஜன்னல் மற்றும் கதவு : வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும். மீன் தொட்டி : வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம். கடிகாரம் : வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும். குடும்ப தலைவர் : குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : தமிழ் பித்தன்

Previous விஜய்,சிம்பு,தனுஷ், இவர்களுடன் நடித்த சுட்டி & குட்டி பையன் தான் இவன்..! யார் தெரியுமா..!? தெரிந்தால் ஷாக் ஆகுவீங்க .நீங்களே பாருங்கள்..!
Next கிரீன் டீ பிரியரா நீங்கள்.? கட்டாயம் இதை படியுங்கள்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

காலையில் தினமும் உள்ளங்கைகளில் கண் விழியுங்கள்..! ஏன் தெரியுமா ? இதை படியுங்கள்…!

உறங்கி எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயம் செய்வோம் .சிலர் கண்ணாடியில் கண் விழிப்பார்கள் . சிலர் மலர்களில் வேறு சிலர் பிடித்தவர்களின் முகத்தில் என்று கண் விழிப்போம் . ஆனால் காலையில் எழுந்ததும் உள்ளங்கையில் கண்விழித்தால் என்ன நடக்கும் தெரியுமா.? அப்படி

டீக்கடை டிப்ஸ்

இளம் பெண்ணின் கன்னித்தன்மை என்ன விலை தெரியுமா..? இப்படியுமா அதிர வைக்கும் உண்மை..!

எல்லா இடங்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் கன்னித்தன்மை வியாபாரம் .இளம் பெண்கள் தற்போது சர்வ சாதாரணமாக அதை செய்கிறார்கள் . லண்டனில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர் தமது பெற்றோர் வாழும் வீட்டை காக்க தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்றதாக வெளியான

டீக்கடை டிப்ஸ்

காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..!

கண்டிப்பாக படிக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்..! காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள்