இந்த செடிகளை வீட்டில் வளர்ந்து வாருங்கள்…! கொசுக்களை விரட்டுவதோடு லிடைக்கும் நன்மைகளும் இவை தான்…!

இந்த செடிகளை வீட்டில் வளர்ந்து வாருங்கள்…! கொசுக்களை விரட்டுவதோடு லிடைக்கும் நன்மைகளும் இவை தான்…!

கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது.

ஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு தரும். இங்கு அப்படி கொசுக்களின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தரும் உள் அலங்கார செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பூண்டு : பூண்டு செடியை வீட்டினுள் ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து வந்தால், அதன் அடர்த்தியான நறுமணத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும். துளசி :

துளசியின் நறுமணத்தினாலும் கொசுக்கள் வராமல் இருக்கும். ஆகவே வீட்டில் தெய்வமாக போற்றப்படும் துளசிச் செடியை தவறாமல் வளர்த்து வாருங்கள்.

புதினா : மிகவும் ஈஸியாக வளரக்கூடிய செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தண்டை நட்டு வைத்து, சரியான தண்ணீர் ஊற்றி வந்தால், புதினா நன்கு வளரும். அதிலும் இதனை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், இதன் நறுமணத்தால் கொசுக்கள் வராமல் இருக்கும். ரோஸ்மேரி
: ரோஸ்மேரி மிகவும் அழகான பூக்களைக் கொண்ட மற்றும் நறுமணமிக்க உள் அலங்கார செடிகளுள் ஒன்று. இதன் வாசனை கொசுக்களுக்கு ஆகாது. எனவே இதனை வளர்த்தால் கொசுக்களை வருவதைத் தடுக்கலாம். லாவெண்டர் : ஊதா நிற பூக்களைக் கொண்ட லாவெண்டர் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அதன் நறுமணம் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதனை வீட்டினுள் வளர்த்து வந்தால், இது கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கும். சாமந்தி : அழகான மலர்களைக் கொண்ட சாமந்திப் பூ வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டது. இந்த நறுமணம் கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே இதன வீட்டினுள் வளர்த்து வந்தால், வீடு அழகாக காணப்படுவதோடு, கொசுக்களின்றியும் இருக்கும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : தமிழ்பித்தன்

Previous வைரலாகும் விஜய் 62 மாஸ் காட்சி. கீர்த்தி சுரேஷ் மேல் கடுப்பில் விஜய் ரசிகர்கள்..! இதோ உங்களுக்காக காட்சி...!
Next மனைவியின் தங்கை அழகில் மயங்கிய பொலிஸ் அதிகாரி செய்த கேவலமான செயல்..! வேலியே பயிரை மேய்கிறது...!

About author

You might also like

மருத்துவம்

பக்கவாத நோயைத் தடுக்க இந்த உணவு போதும்

பக்கவாத நோயைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த உணவு வகைளை உட்கொள்ள வேண்டுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை சாப்பிட்டு வருவதால் அவர்களை பக்கவாதம் நோய் தாக்குவது குறைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவை

மருத்துவம்

நீண்ட நேர உறவுக்கும், ஆண்மை பலத்திற்கும் அரை நொடி வைத்தியம் இதோ..!

இன்றைய காலத்தில் முக்கிய பிரச்சனை என்ன என்று கேட்டால் ஆண்கள் சொல்லும் ஒரே விடயம் ஆண்மை பிரச்சனை தான் . பிரிவுகள் மட்டுமல்ல தேவையற்ற விடயங்கள் கூட நடைபெறுகின்றது . நாளொன்றுக்கு 85% ஆண்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அறிக்கைகள்

மருத்துவம்

30 வினாடிகள் காதுகளை பொத்திப் பாருங்கள்..! 10 சிறு அவசியமான மருத்துவ குறிப்புகள் ..!

முக்கியமான மருத்துவ குறிப்புகள் சில . 1. ஒரு 30 வினாடிகள்… இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்… நின்று போகும் தீராத விக்கல்!  2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!