இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 13-06-2018, வைகாசி 30, புதன்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 01.13 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.43 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30-12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.
6/13/2018
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.
பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களுடைய ஆலோச னைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.
சிம்மம்
சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தில் அமைதி நிலவும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் நீடி ப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
தனுசு
தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச்
சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.
கும்பம்
கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த- பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous விஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ...! அதிகம் பகிருங்கள்...!
Next பிரபல நடிகர் அதிரடி கைது .! பிரபல மாடல் பெண்ணை வயிற்றில் மிதித்ததாக குற்றச்சாட்டு...!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய ரெக்ஸ் ரில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலாளராக சீ.ஐ.ஏவின் பணிப்பாளராக கடமையாற்றிய மைக் பாம்பியோவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ட்ராம்ப் பதவி

நிமிடச் செய்திகள்

ஆபாச பட நடிகைக்கு எதிராக தடையுத்தரவு பெற்றுக்கொண்ட ட்ராம்ப்

ஆபாச திரைப்பட நடிகைக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் பிரபல ஆபாச திரைப்பட நடிகை ஸ்ட்ரோமி டெனியல்ஸிற்கு எதிராக ட்ராம்பின் சட்டத்தரணி இந்த தடையுத்தரவினை பெற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடனான உறவு தொடர்பில் பகிரங்கமாக பேசுவதனை தவிர்க்குமாறு

நிமிடச் செய்திகள்

கார்களுக்கும் வரி விதிக்க முயற்சிக்கும் ட்ராம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கார்களுக்கும் வரி விதிப்பதற்கு முயற்சித்து வருகின்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இவ்வாறு வரி விதிக்கப்பட உள்ளது. மிகவும் முட்டாள்தனமான வர்த்தக கொள்கைகளினால் அமெரிக்கா பல ஆண்டுகளாக நட்டத்தை அனுபவித்து வந்துள்ளதாக ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.