வலி இன்றி எடை குறைக்க எளிய வழி …! கொள்ளை இப்படி செய்து உண்ணுங்கள்…!

வலி இன்றி எடை குறைக்க எளிய வழி …! கொள்ளை இப்படி செய்து உண்ணுங்கள்…!

உடல் எடையை குறைக்க எல்லாருக்கும் ஆசை இருக்கும் அதிலும் இலகுவாக குறைப்பதென்றால் சொல்லவும் வேண்டுமா என்ன.? இதோ இலகு வழிகள்..! கொள்ளு” இதை பயன்படுத்தினாலும் இலகுவாக உடல் எடையை குறைக்க முடியும்..!

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.

கொள்ளுவை நம் அன்ராட உனவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

இதனை வேகவைத்து, அந்த நீரை குடித்து வந்தால் சளி குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும. சுவாசத் தொந்தரவு நீங்கும் காய்ச்சலையும் குணமாக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும். உடல் வலுவாகும்.

கொள்ளு ஆன்டி-ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது. கொள்ளை ஊற வைத்து ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்...!
Next காசநோய் உட்பட நுரையீரல் வியாதிகளை போக்கும் மல்லி..! நொடியில் படித்து பகிருங்கள்...!

About author

You might also like

மருத்துவம்

கர்ப்பக்காலத்தில் மீன் எண்ணெய் உட்கொள்வதில் இத்தனை நன்மையா?

கர்ப்பக்காலத்தில் மீன் எண்ணெய் வில்லைகளை உட்கொள்வதில் பல நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை நோய்களை மீன் எண்ணெய் உட்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும் என தெரிவிக்கின்றனர். லண்டன் இம்பிரியல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர்களினால்

மருத்துவம்

கழுத்தின் இந்த இடத்தில் ஐஸ் கட்டி வைப்பதால் இத்தனை நன்மைகளா ..!? படியுங்கள் ஆச்சர்ய பட்டு போவீர்கள் ..!

முழுமையான மனிதன் என்று யாருமே கிடையாது ஏதாவது ஒரு விதத்தில் எம்மையும் துன்பம் நெருங்கி இருக்கும் சில நேரம் பிரிவுகள் பல நேரம் நோய்கள் . எல்லா நோய்களுக்கும் உடனடி தீர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது . இப்படியும் சில

மருத்துவம்

ஆண்மையை அதிகரிக்கப் பயன்படும் பப்பாளி விதை

ஆண்மையை அதிகரித்துக் கொள்வதற்கு பப்பாளி விதைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், வாழ்;க்கை முறைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆண்மை குறைவு ஏற்படுகின்றது. அதிகளவு செலவு செய்யாது, ஆண்மைப் பிரச்சினைக்கு மிகவும் எளிய