இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 14-06-2018, வைகாசி 31, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.42 வரை பின்பு வளர்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.04 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கௌரி விரதம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிபலன்
6/14/2018
மேஷம்
மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக
செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விசேஷங்களை முன்னின்று டத்துவீர்கள்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைகூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கன்னி
கன்னி: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.
துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள்
கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
தனுசு
தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமா
கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.
கும்பம்
கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மீனம்
மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous திருமணத்தின் பின்பும் சமந்தாவின் வெற்றிக்கு காரணம் இது தானாம்...!
Next வலி இன்றி எடை குறைக்க எளிய வழி ...! கொள்ளை இப்படி செய்து உண்ணுங்கள்...!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

9 வருடம் கணவர் என்னை தொடவே இல்லை” அதிர்ந்து போன நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

யார் யாரோ எப்படி எப்படியோ திருமணம் செய்றாங்க பிரியுறாங்க இவங்க எப்படி திருமணம் செய்து எப்படி பிரியுறாங்க பாருங்க இதெல்லாம் கொடுமை யுவரானர்.. திருமணமாகி 9 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லாத தம்பதியினரின் திருமண செல்லுபடியாகது எனக்கூறி மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிமிடச் செய்திகள்

” ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா…?” – கேட்கிறார் நாடாளூமன்ற உருப்பினர் எம் திலகராஜ்

” ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா…?” கனகராஜூடன் விவாதிக்க அமைச்சரின் உதவியாளரான கமலதாசன் சுப்பையா போதும் – திலகர் பதில்!!! மூக்கை உடைப்பேன் என்றவருக்கு நாக்கில் என்ன சுளுக்காமா? சவாலை சரியாக ஏற்க வேண்டும் அ’தில்’தான் தில் இருக்கிறது என்கிறார் திலகர்

நிமிடச் செய்திகள்

தூத்துக்குடி மக்கள் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய அரசு..! என்ன செய்துகொண்டிருகின்றது பாருங்கள்..!

தூத்துக்குடி பற்றி எல்லாரும் பேசிக்கொண்டிருக்கின்றோம் . 13 உயிர்கள் என்று சொன்னாலும் கணகில் வராத பல உயிர்கள் பறி போய் உள்ளது . இதை கண்டுகொள்ள யாரும் இல்லை. தமிழ் நாட்டில் தலைவர்களே உணர்வில்லாத போது மத்திய அரசு இப்படி செய்வது