மரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.? இதை படியுங்கள்..!

மரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.? இதை படியுங்கள்..!

ஒவ்வொரு மனிதனும் இறந்த பின் என்ன நடக்கும் என்று தேடிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இறக்கும் போது அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று நாம் தேடி பார்ப்பதில்லை . ஆனால் அவற்றை தான் நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆமாம் நாம் இறக்கும் போது நம் கண்களுக்கு சில விடயங்கள் தெரியுமாம் ..

என்ன எல்லாம் தெரியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் ம். பிறப்பு என்பதைக் கூடு எப்படி உருவாகிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்துவிட்டோம். ஆனால் இறப்பு என்பது இந்த உலகத்தில் நிகழும் ஒரு மர்ம முடிச்சாகவே இருக்கிறது. யாருக்கு எப்போது மரணம் வருமென்றே தெரியாது.
ஒருவர் இறப்பதற்கு முன் ஏதோ ஒருவித பயம், இனம் புரியாத நிலை எல்லாம் இருக்கும்பொழுது தான், மனிதன் இதற்கு முன் தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறான். அந்த இறப்பின் நொடியில் எம்மால் என்றும் போல் இருக்க முடியாது . இது உண்மையான விடயம் தொடர்ந்துபடியுங்கள்..

பொதுவாக ஒருவருடைய உயிர் ஊசலாடும்போது, மற்றவர்கள் சாதாரணமாக அவர் இறக்கப் போகிறார் என்று சொல்வார்கள். ஆனால், ஆய்வாளர்கள் அது பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
குறிப்பாக, மரணப் படுக்கையில் இருக்கும்போது மரணம் என்பது மிக சாதாரணமாக எல்லாம் நடப்பதில்லை. அப்போது அவர்களுடைய சிந்தனை ஓட்டம் இந்த பிரபஞ்சத்தையே சுற்றி வரும்.

இதுபோல் மரணம் பற்றி இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவர்களுடைய எண்ணங்களும் பார்வையும் மிக சாந்தமாகவும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மீது அக்கறையும் வெளிப்படும். தான் இதுவரை யாருக்காக வாழ்ந்தோமோ அவர்களைப் பற்றிய எதிர்காலம் கண் முன்னே வந்து நிற்கும். சிலருக்கோ யாருக்காகவும் இல்லாமல் தனக்காக மட்டுமே வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்குக் கூட தான் இறக்கும் தருவாயில், யாருக்காக வாழ்திருக்க வேண்டுமோ அவர்களை எண்ணி மனம் வருந்துவார்கள்.

இறப்பதற்கு முன் அவர்களுடைய கைகளை ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி பிடித்துக் கொண்டிருக்கும். அப்போது இதுவரை தான் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பார்கள். வருத்தப்படுவார்கள். சிலருக்கு கண்ணீர் மட்டுமாவது வரும். தன்னுடைய தவறுக்கு தானே சாட்சியாக இருந்து மன்னிப்பு கேட்பார்கள்.
அந்த கருணையும் அவர்களுடைய பார்வையும் அந்த அறை முழுக்க பரந்து விரிந்து, அவர்களுடைய ஆன்மாவின் உருவில் உலவிக் கொண்டிருக்கும்.
மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பலரும் இந்த தருவாயில், தன்னுடைய தாயை மனதுக்குள் நினைத்துக் கொள்வார்கள்.

ஏனெனில் அவர் தான் தன்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். அவர்தான் இதுவரை தான் வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான மூலக்காரணமாக செயல்படக் கூடியவர். அதேபோல், தனக்கு முன் மரணத்தைத் தழுவிய தாயும் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றித்தான் யோசித்திருப்பார் என்ற எண்ணம் தோன்றும். நான் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களுடைய ஆன்மா தாயின் ஆன்மாவுடன் பேச முயற்சித்துக் கொண்டிருக்கும்.
மரணப் படுக்கையில் அந்த அறைக்குள்ளாகவே தன்னுடைய அம்மா, அப்பா, நெருங்கிய ஆன்மாக்களுடன் இவர்களுடைய ஆன்மா பேசிக் கொண்டிருக்கும். அவருக்கு நெருங்கிய ஆன்மாக்களும் அந்த அறையில் உலவும். இவரை தங்களுடைன் அழைத்துச் செல்ல காத்திருக்கும். இந்த மனநிலையை இறக்கும் தருவாயில் உள்ள அவர்கள் மட்டும் தான் உணர முடியும். மற்ற சுற்றி நிற்கிற உறவினர்களோ அன்பு கொண்டவர்களோ கூட உணர முடியாது.

திடீரென விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள், அதேபோல் வயது முதிர்ந்து இயற்கை மரணம் நிகழாமல் திடீரென மரணம் நேர்பவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள், எண்ணங்கள் ஏதும் தோன்றாது. இயற்கையாக மரணிப்பவர்கள், அதாவது வயது முதிர்ந்த பின், நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களால் இதுபோன்ற விஷயங்களை உணர முடியும்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இலங்கை தமிழ் இளைஞன் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்..! இளைஞர்களே எச்சரிக்கை..!
Next மாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ...!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

தமிழ் பெண்ணை தரக்குறைவாக நடத்திய சிங்களவர்..! குரல் கொடுத்த முன்னால் ஜனாதிபதியின் மகன்..!

யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று காலை புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்ற போது,

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

ஜூன் 15 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் இதோ உங்களுக்காக…! இன்று பஞ்சாங்கம் நாள்: வெள்ளிக்கிழமை திதி: துவிதியை இரவு 9:30 வரை பிறகு திரிதியை நட்சத்திரம்: திருவாதிரை பகல் 2:15 வரை

நிமிடச் செய்திகள்

ஐரோப்பாவை அச்சுறுத்தி வரும் பனிப்புயல்

ஐரோப்பாவின் பல நாடுகளில் பனிப்புயல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பனிப்புயல் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான ஐரோப்பிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதிகள் பாதைகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ரயில் பயணங்களும் ரத்து