fbpx
டீக்கடை டிப்ஸ்

பில்கேட்ஸின் விதிமுறைகள்

நாம் எல்லோரும் ஓடிக்கொண்டிருப்பது ‘பணம்’ என்ற ஒன்றைச் சம்பாதிப்பதற்காகத்தான். அந்தப் பணத்தை சம்பாதித்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து நாம் வியக்கின்றோம். அவர்களை போல் நம்மால் முடியாது என்று அங்கலாய்த்துக் கொள்கின்றோம். ஆனால் இந்தப் பணத்தைச் சம்பாதித்த கோடீஸ்வரர்கள் எளிமையாகத்தான் இருக்கின்றார்கள். அவர்களுடைய கோட்பாடுகளும் எளிமையாகத்தான் இருக்கின்றன.

பிறகெப்படி நம்மால் பணத்தை இலகுவாகச் சம்பாதிக்க முடியாது போனது என்று நாம் யோசிக்கலாம்! ஆம் வெற்றி பெற்றவர்களின் தோல்விகளை ஆராய்ந்து பார்த்தல், அவர்களுடைய வழிமுறைகளை பின்பற்றல் ஆகியன எம்மையும் வெற்றி பாதையில் இட்டுச் செல்லும்.

என்ன வெற்றி பெற நீங்கள் தயார்தான்? அப்படியென்றால் பில்கேட்ஸ் பற்றி நினைத்துப் பாருங்கள். அட அவர் பெரிய பணக்காரர் ஆயிற்றே அவருக்கென்ன தோல்வி இருக்கப் போகுது என்று நினைக்கிறீர்களா? அதுதான் தவறு. பில்கேட்ஸும் பல தோல்விகளுக்கு பின்தான் இந்தப் பெயரையும் புகழையும் பெற்றிருக்கிறார். அவர் வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு 10 விதிமுறைகளைக் கூறியுள்ளார். அவை எவையென்று பார்க்கலாமா?

1. இந்த உலகம் உங்கள் சுயத்தைப் பற்றியோ உங்கள் ஏனைய விடயங்களை பற்றியோ கணக்கெடுத்துக் கொள்ளாது. அது கணக்கிலெடுப்பது உங்கள் வெற்றிகளை மட்டுமே.

2.நல்ல சந்தர்ப்பத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.

3.ஒன்றை அடைவதற்கு தகுதியானவர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

4. உங்கள் பெற்றோரைப் பார்க்கையில் பழையகால சலிப்பானவர்களாய் தோன்றும் அவர்களுக்கும் அவ்வாறே தோன்றியிருக்கும். எனினும் அவர்கள் உங்கள் நலனிற்காக பாடுபட்டதே அதிகம்.

5. உங்கள் தோல்விகளுக்கு பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்தவேண்டாம். அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.

6.முட்டாள்களாய் தோன்றுபவர்களிடம் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்களில் எவரும் நாளை உங்கள் முதலாளி ஆகலாம்.

7.ஆசிரியர்கள் உங்களை நெருக்குவதாகத் தோன்றினால் கொஞ்சம் பொறுத்திருந்து உங்கள் முதலாளிகளைப் பாருங்கள். அவர்கள் இவர்களை போல் அல்லாமல் உங்கள் அடைவுகளில்தான் அவர்களின் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

8.பள்ளியைப் போல் வாழ்க்கை என்பது தவணைகள் அல்ல விடுமுறைகள் அங்கில்லை.

9. பள்ளிக்கூடங்கள் வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்ற பிரிவினை பேதங்கள் அற்றவை ஆனால் வாழ்க்கையோ அவற்றினாலேயே ஆனது.

10.வாழ்க்கை நேர்மையானது அல்ல. இந்த உண்மையை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதை படிக்கும்போது பல கேள்விகளுக்கு ‘அட ஆமால்ல’ என்று மனதுக்குள் தோன்றினால் நீங்கள் சரியான கட்டத்தில்தான் இருக்கின்றீர்கள் கொஞ்சம் முயன்றால் நீங்களும் வெற்றியாளர்தான்.

மேலும் படிக்க

தம்பதிகளுக்குள் உடலுறவு அவசியமா? ஒரு விரிவான அலசல்!!

fm puradsi

மனைவியின் அன்பை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா?

sinegithi Radio

சாப்பிட அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை? கவலைய விடுங்க இதை கொஞ்சம் படியுங்க!

sinegithi Radio