fbpx
கிச்சன் கலாட்டா

தப்பில்லாம ருசியாக சமைக்க ஆசையா?

ன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா?’ இப்படி பாடிக்கொண்டே சமைப்பவரா நீங்கள். அப்போ கண்டிப்பா இந்த சமையல் டிப்ஸ் உங்களுக்குத்தான். சமையல் என்றது மிகப்பெரும் கலை அது பலரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முதன்மைக் கலை. அப்படியான சமையல் கலையைச் செய்யும்போது நீங்க என்னவெல்லாம் தப்பு பண்றீங்க தெரியுமா? வாங்க பாக்கலாம்.

01. புதிய உணவுவகைகளை தயாரிக்கும்போது செய்முறையை முழுவதும் உள்வாங்காமல் செய்தல்.
இது பற்றி ‘Cooking School Secrets for Real World Cooks’ என்னும் புத்தகத்தில் சமையல் நிபுணர் லிண்டா கருக்சி என்ன கூறுகின்றார் தெரியுமா? ஒரு இடத்திற்குப் போவதற்கு முதல் அந்த இடத்தின் வரைபடத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதுபோலத்தான் சமையலிலும் செய்முறையில் இருப்பவற்றை தெளிவாகப் புரிந்து சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இனி கரண்டியை எடுக்க முன்பே என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை மனக்கண்ணில் ஓடவிடுங்கள்.

02.பாத்திரம் முழுவதும் காய்கறிகளை திணிக்காதீர்கள்
ஒரு உணவைச் சமைக்கின்ற போது அளவான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் நிரம்பி வழியும் வண்ணம் உணவு வகைகளை உள்ளிடாதீர்கள். வேண்டுமானால் இரண்டு மூன்று பாத்திரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

03.உணவுகள் பாத்திரத்தின் அடியில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிலர் சமைக்கும்போது பாத்திரத்தின் அடியில் சமைத்த உணவுகள் எல்லாம் அடிப்பிடித்துக் கிடைக்கும். இது மற்ற உணவுகளின் சுவையையும் பழுதாகி பாத்திரம் கழுவுவதையும் சிரமமாக்கிவிடுகின்றது. ஆகவே அடுப்பை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

04.தேவையான அளவு தண்ணீர் வீட்டுக் கொள்ளுங்கள்.
சில உணவுகளை சமைக்கும்போது தண்ணீர் குறைவாகவும் உணவு அதிகமாகவும் இருக்கும்போது தண்ணீர் வெப்பமாகி ஆவியானபின் உணவு இறுக்கிப் போய் தரமற்றுப் போய்விடுகின்றது. உணவிற்கு ஏற்ற அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

05.கதைத்துக் கொண்டே உப்பு, சீனியை அதிகமாக்க கொட்டுவதை நிறுத்துங்கள்.
சிலர் சமையல் குறிப்பில் இருப்பதை பார்த்துக்கொண்டே சமைப்பார்கள்.அங்கு அரைகிலோவிற்கு 2 தேக்கரண்டி உப்பு என்றும் இருக்கும். இவர்கள் கால்கிலோவிற்கும் அந்த அளவிலேயே உப்பை இட்டால் அன்றைய சமையல் அம்போதான்.

இனியென்ன தப்பில்லாம சமைச்சு அசத்துங்க.!!!

மேலும் படிக்க

சுவையான இறால் பஜ்ஜி..

fm puradsi

பழங்களையும் மரக்கறிகளையும் வாடாமல் பாதுகாப்பது எப்படி?

sinegithi Radio

உங்க சமையலறையில இதெல்லாம் இருக்கா?

sinegithi Radio