fbpx
டீக்கடை டிப்ஸ்

பேஸ்புக் ஓனர் வெற்றிக்கு கூறும் வழிகள் என்னவென்று தெரியுமா?

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? தேடிக் களைத்துப் போய்விட்டீர்களா? அப்பிடீன்னா நீங்க கண்டிப்பா இத படிச்சுப் பாருங்க.

நாம் அனைவரும் இன்று பலமணி நேரங்களை எதற்குள் செலவழித்துக் கொண்டிருக்கின்றோமோ அந்த பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸுகேர்பேஹ் வெற்றி பெறுவதற்கு என்ன வழிகளை கூறுகின்றார் என்று பார்ப்போமா?

 

உயர்ந்த நோக்கைத்தை கொண்டிருங்கள்.
சாதாரணமாக வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவோ அல்லது வாழ்க்கையை நடத்துவதற்காகவோ வற்றி பெற வேண்டும் என நினைக்காதீர்கள். உயர்ந்த நோக்கம் ஒன்றை கொண்டு அதை நோக்கி முன்னேறுங்கள்.

காலத்தை கருத்திற் கொள்ளுங்கள்

காலத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கின்றது.
நீங்கள் அதிகம் உழைத்திருந்தால் அதன் பலன் அதிகமாக இருக்கும் குறைவாக உழைத்திருந்தால் அதன் பலன் சொற்பமாகவே இருக்கும்.

விமர்சனங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
விமர்சனங்கள்தான் எப்போதும் நம்மை வழிநடத்திச் செல்லும். விமர்சனங்களைக் கண்டு அஞ்சியிருந்தால் இந்த வேலையில் பேஸ்புக் என்கிற சமூக நிறுவனம் எப்போதோ உலகம் அறியாமலேயே அழிந்திருக்கும். மற்றவர்களின் விமர்சனக்களில் உள்ள உங்களுடைய பலவீனங்களைக் கண்டுபிடியுங்கள்.

தவறுகளை செய்து திருந்துங்கள்.
தவறுகளை போல் நல்லதொரு ஆசான் எவருமில்லை என்பார்கள். உண்மையில் தவறுகளிலிருந்துதான் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்கின்றோம். ஆகவே தவறு செய்து திருந்திக் கொள்ளுங்கள்.

வேலையில் ஆர்வம் உடையவர்களை மட்டும் உங்களோடு பணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.
பணத்திற்காக வேலை செய்ய நினைக்கின்றவர்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் இல்டசியங்களுக்கு ஒருபோதும் துணை செய்ய போவதில்லை.

சிக்கலான பிரச்சனைகளின்போது புதிதான ஒரு தீர்வை உருவாக்குங்கள்.
ஒவ்வொரு கடினமான பிரச்சனைகளை சந்திக்கின்ற போதும் அதற்கான புதிய தீர்வுகள் என்பது உங்களை மாற்றத்தின் வலிக்கு இட்டுச் செல்லும்.

எளிமையாக இருங்கள்.
பேஸ்புக்கின் அமைப்பே அந்த எளிமையை எடுத்துக் காட்டிவிடும். அது இதைச் சொல்ல வருகின்றதோ , எதை வழங்க வருகின்றதோ அதை நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கின்றது. இந்த எளிமையான நேரடித்தன்மை முன்னேற்றத்திற்கு மிக அவசியம்.

ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள்.
எல்லோரும் செய்கின்றதையே நீங்களும் செய்யாமல் சற்று வித்தியாசமான எதையாவது முயற்சித்துப் பாருங்கள். வியாபாரத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி அது உங்களை உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும்.

உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக் கொள்ளுங்கள்
மற்றவர்கள் உங்களுக்கு விடுக்கும் சவாலை விட உங்களுக்கு நீங்களே விடுக்கும் சவால் உங்கள் வெற்றிக்கு துணைபுரியும். அதுவே உங்களை ஒரு இல்டசியத்தை நோக்கி பயணிக்க வைக்கும்.

என்னங்க மார்க் மாதிரி ஜெயிக்கணும்னு தோணுதா? அப்போ கண்டிப்பா மேல உள்ளதா எல்லாம் கவனத்தில் கொள்ளுங்க.

 

 

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இன்றைய வீடியோக்கள்!!

மேலும் படிக்க

சாப்பிட அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை? கவலைய விடுங்க இதை கொஞ்சம் படியுங்க!

sinegithi Radio

எலுமிச்சையை வைத்து தூங்கினால் நடக்கும் மாற்றங்கள்

fathima sahira

பணத்தை சேமிக்க ஆசையா? இப்பிடி கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் !

sinegithi Radio