fbpx
  • Home
  • டீக்கடை டிப்ஸ்
  • இதையெல்லாம் செய்யுறீங்களா? வயதானத்துக்கு பிறகு கவலைப்பட போறீங்க பாருங்க!
டீக்கடை டிப்ஸ்

இதையெல்லாம் செய்யுறீங்களா? வயதானத்துக்கு பிறகு கவலைப்பட போறீங்க பாருங்க!

ன்னங்க பெட்ரோல் விலையைப் போல வயது ஏறிட்டே போகுதா? ஏற்கனவே இளமைலயே நீங்க  படிப்பு, காதல்,நட்பு, வேலை என்று ஒரே துன்பங்கள் துயரங்களா இருப்பிங்க அப்புறம் என்னங்க உங்க கண்ணாடில நாலஞ்சு ஜெமினிகணேசன்  தோன்றி ‘மயக்கமா கலக்கமா’ னு பாடி கலாய்க்கிறாரா?

இப்பவே இப்பிடின்னா வயதானத்துக்கு பிறகு நீங்க கவலைப்பட போறீங்களா? அப்போ இப்போ நான் சொல்ல போற விஷயங்களை கொஞ்சம் காதுகொடுத்து கேளுங்க. கண்கொண்டு பாருங்க. ஏனென்றால் இந்த விஷயங்களை நீங்க செய்தாலும், செய்யலன்னும் வயசான காலத்தில தான் உக்காந்து கவலைப்படப்போறீங்க.

அவை என்னென்ன விஷயம்னு பாப்பமா?

01.சந்தர்ப்பம் கிடைத்தும்  உலகத்தை சுற்றும் வாய்ப்பை தவிர்த்தல்

ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் எண்டு இல்லாமல் நாலு இடத்தை போய் சுத்திப் பாத்து நான்கு மனிதர்களுடன் பழகி பாருங்க அந்த மனச் சந்தோசம் என்க கிடைக்கும். அது எல்லாம் தான் நீங்க முதுமைல நினைச்சு பாக்கப் போற சந்தோசங்கள்.

02.தவறான  வாழ்க்கைத் துணையத் தேர்ந்தெடுத்தல்.

இன்று நாம் யாரைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அவர்கள்தான் நம்முடைய தள்ளாத வயதிலும் நம்முடன் கூட வர போகின்றார்கள். எனவே அந்த தெரிவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் முதுமையும் சுமைதான்.

03.மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு பயந்து வாழுதல்

நம்முடைய வாழ்க்கையை நம்மைத் தவிர எவராலும் வாழ முடியாது. எனவே மற்றவர்களிற்கு பயந்து நம்முடைய விருப்பங்களை கைவிட்டால் அந்த மனக்குறை முதுமையில் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

 

04.காதலைச் சொல்ல பயப்பிடுதல்

சொல்லாத காதல் செல்லாத காசாகிவிடும். எனவே ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ அன்பை, காதலை தெரிவியுங்கள். இல்லையென்றால் அந்த மனக்குறை நிழலாய் உங்களைத் தொடரும்.

 

05.ஓய்வில்லாமல் இருத்தல்

ஓடி ஓடி உழைக்கணும் அப்பிடின்னு சொல்லுவாங்க. ஆனா அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு . யாருக்காக உழைக்கிறோம் நமக்காகத்தானே? எனவே நம்முடைய ஓய்வு நேரத்தையும் நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.

 

06.பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருத்தல்.

பெற்றோர்கள் நமக்காகவே வாள்பவர்கள். அவர்களுடன் இப்போதே மனம் வீட்டுக் கதையுங்கள். இல்லையென்றால் நாளை நீங்களும் வளர்ந்து பெற்றோர் ஆகும் போது அந்த தனிமை உங்களை வந்தே தீரும்.

என்ன நான் சொல்றது சரிதானே? கொஞ்சம் முதுமைல சந்தோசமா இருக்கிறதுக்கான ஆயத்தங்களை இப்பவே செய்வமா?

 

இன்றைய வீடியோக்கள்!!

மேலும் படிக்க

5 நிமிசம் ப்ளீஸ்!

sinegithi Radio

7 நாளைக்கு இத சாப்பிட்டால் ஆயுசு நூறு

fathima sahira

எலுமிச்சையை வைத்து தூங்கினால் நடக்கும் மாற்றங்கள்

fathima sahira