fbpx
  • Home
  • டீக்கடை டிப்ஸ்
  • சாப்பிட அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை? கவலைய விடுங்க இதை கொஞ்சம் படியுங்க!
டீக்கடை டிப்ஸ்

சாப்பிட அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை? கவலைய விடுங்க இதை கொஞ்சம் படியுங்க!

ந்த நேரமும் ஓயாமல் சாப்பிடுவதற்கு  அடம் பிடிக்கிறதா உங்கள் குழந்தை? இது எல்லோருடைய வீட்டிலும் நிகழ்கின்ற அக்கப்போர்தான். இந்தக் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கின்றது தெரியுமா? நிறையவே செய்யணும். அப்போதுதான் உங்க குழந்தையை நிங்கள் ஆரோக்கியமா வளர்க்கலாம்

சரி வாங்க குழந்தையை சாப்பிட வைக்க என்னவெல்லாம் செய்யலாம்னு பார்ப்போம்.

01.குழந்தைகளின் முடிவுக்கே சாப்பாட்டை விட்டுவிடுங்கள்.

என்னங்க நல்ல ஆரோக்கியமான சாப்பட்டை சமைத்துவிட்டு குழந்தை சாப்பிடவில்லையே என்று டென்சன் ஆகிற பேர்வழியா நீங்க. பேசாம அவங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து அதை உங்க ஸ்டைலில் ஆரோக்கியமா செய்து குடுங்க. அவங்க தெரிவு செய்த சாப்பாடு என்றதால மறுக்காம சாப்பிடுவாங்க.

02.அவர்களின் ஸ்டைலில் சாப்பிட விடுங்கள்

சில பெற்றோர் பிள்ளைகள் கொட்டாமல் சிந்தாமல் பெரியவர்கள் போலவே உண்ண வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். இதுவும் குழந்தைகள் சாப்பிடாமல் அடம்பிடிப்பதற்கு ஒரு காரணமாக இருந்துவிடுகின்றது. எனவே அவர்கள் எப்படி அமர்ந்து சாப்பிட விரும்புகின்றாார்களோ அப்படியே விட்டுவிடுங்கள். கொ்டிச் சிந்தியாவது சாப்பிட்டுவிடுவார்கள்.

03.கோபத்தோடு திட்டிக்கொண்டே சாப்பாட ஊட்டாதீர்கள்

குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது குட்டி கதைகளையோ அல்லது அவர்களுக்க பிடித்த விடயங்களையோ சொல்லிக் கொண்டே சாப்பாட்டை ஊட்டிப் பாருங்கள். அடம்பிடிக்கமல் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். மாறாகத் திட்டிக்கொண்டே சாப்பாட்டை ஊட்டினால் அவர்களுக்கு உணவில் வெறுப்புத்தான் ஏற்படும்.

04.சமையலில் குழந்தைகளை உதவ விடுங்கள்.

குழந்தைகளுக்கு  தாங்கள் செய்யும் சிறிய சிறிய விடயங்கள் கூட பெரிதாகத் தெரியும். சமையலின்போது அவர்களுக்க சிறிய வேலைகளைக் கொடுத்து அவர்களைப் பாராட்டினால் அத அவர்களுக்க பிடித்துப்போய் உணவிலும் நாட்டம் ஏற்படும்.

05.பிடிக்காத ஆரோக்கியமான உணவுகளை டிசைனாக செய்து  உண்ண வைத்துவிடுங்கள்.

பொதுவாகக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு என்பதன் அர்த்தம் வியங்காது. அவர்கள் நிறத்தையும் மணத்தையும் கொண்டே உணவுகளை விரம்புகின்றார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளையும் மசித்தும்இ குழைத்தம் டிசைனாக செய்து அவர்களை ஈர்க்க வைப்பத் மூலம் உண்ண வையுங்கள்.

மேலும் படிக்க

கழுத்தழகை கவனிக்கிறீங்களா இல்லையா?

sinegithi Radio

மூல நோய் உட்பட பல நோய்களுக்கு ஒரே தீர்வாகும் எள்ளு …!

fm puradsi

பெண்ணின் பிரசவத்திற்கான அறிகுறிகள்..!

fm puradsi