fbpx
கிச்சன் கலாட்டா

சமையல் குறிப்புக்கள்.

சமையல் செய்யும் பெண்களே  கொஞ்சம் இதையெல்லாம் படிச்சுட்டுப் போனா சமையலில் உங்களை வெல்ல யாரும் இருக்க மாட்டாங்க.

அப்பளத்தைப் பொரித்தவுடன் பாத்திரங்களில் போட்டு வைக்காமல் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் இளகாமல் இருக்கும்.

குழம்பு சமைக்கும்போது சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ஒரு தக்காளியை இரு துண்டுகளாக வெட்டி போட்டால் அதீத சுவையாக இருக்கும்.

காலைத் தேநீரில் சிறிது ஏலக்காய்த் தூளைச் சேர்த்தால் தேநீரின் சுவை அதிகரிக்கும்.

நம்மில் பலர் கறிவேப்பிலை சாப்பிடுவதில்லை. கறிகொதித்து இறக்கும்போது இவற்றை இடித்து தூளாக்கி கறிக்குள் போட்டால் தூக்கி எறிய மாட்டார்கள்.

இஞ்சி அதிகமாக வாங்கிவிட்டீர்களா? அவற்றை காயாமல் வைத்திருக்க மணலில் அல்லது நிலத்தில் புதைத்துவிட்டு நீர்விட்டு வைத்தால் பழுதடையாது.

முருங்கைக் கீரை சமைக்கும்போது  சிறிது சீனி சேர்த்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

உணவு சமைத்த பின் பாத்திரத்தில் சிறிது உப்பையும் நிரையும் ஊற்றி வையுங்கள். விரைவாகச் சுத்தம் செய்வதற்கு இது சிறந்த வழி.

நண்டு சமைக்கும்போது ஒரு நெட்டு முருங்கை இலையைப் பிய்த்து அதனுடன் சேர்த்து வேகவைத்தால் சமிபாட்டுப் பிரச்சினைகளட இருக்காது.

வெண்டிக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சமைக்கும் முன் அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை தெளிக்கவேண்டும்.

மேலும் படிக்க

வீட்டிலேயே சிக்கன் சூப் தயாரிப்பது எப்படி?

sinegithi Radio

ஆரோக்கியமான கீரை இட்லி….

fm puradsi

சுவையான இறால் பஜ்ஜி..

fm puradsi