fbpx
கிச்சன் கலாட்டா

இறால் கிரேவி செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்
இறால்- 1/2 கிலோ , வெங்காயம்- 200கிராம், இஞ்சி பூண்டு விழுது- 2தேக்கரண்டி , தக்காளி- 1 , பூண்டு – 10, கிராம்பு- 5 , கரம்மசாலா – 1/2 தே.கரண்டி, கறிவேப்பிலை , கொத்தமல்லிதழை, மிளகாய்த்தூள் – 1 தே.கரண்டி, மல்லித்தூள் – 1/2 தே.கரண்டி , மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி , மிளகுத்தூள்- 1 தே.கரண்டி , எண்ணெய் ,உப்பு.

 

செய்முறை
இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாதி வெங்காயம்,தக்காளியை வெட்டிக்கொள்ளவும். பாதி வெங்காயம் பச்சையாக அரைத்துக் கொள்ளவும் . அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு போட்டு தாளித்து , நறுக்கிய வெங்காயம் , பூண்டு, போட்டு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் தக்காளியை போட்டு நன்றாக வதக்கியதும் , இறாலை போட்டு நன்றாக பிரட்டவும். இதனுடன் மல்லித்தூள்,மியகாய்த்தூள்,மஞ்சள்தூள்,கரம்மசாலாத்தூளு; சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும். இறால் வெந்து எண்ணெய் மேலே வரும் போது,மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்

 

மேலும் படிக்க

காஸ் அடுப்பை பயன்படுத்துபவரா? அப்போ கொஞ்சம் கவனியுங்க!

sinegithi Radio

ஆரோக்கியமான கீரை இட்லி….

fm puradsi

உங்க சமயலறையில் தேசிக்காய் இருக்கா?

sinegithi Radio