fbpx
தொழில்நுட்பம்

பூமியை நெருங்கும் செவ்வாய்

செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு  பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

27 ஆம் திகதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில்  பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. எனவே செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கியது. இருந்தாலும் டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கிலோ மீட்டர். தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.

 

மேலும் படிக்க

வாட்ஸ் அப் வதந்திகளுக்கு வச்சான் பாரு ஆப்பு!

sinegithi Radio

இனி ஆங்கில இலக்கணப் பிழை பற்றிய கவலை வேண்டாம். கூகிளின் புதிய அம்சம்!

sinegithi Radio

கூகிளிற்கு வந்த பேரிடி! 3.42 லட்சம் கோடி ரூபாய் தண்டம்!

sinegithi Radio