fbpx
டீக்கடை டிப்ஸ்

அந்த காலத்து ராஜா ராணி அழகாக இருக்க என்ன செய்தார்கள்

ரோஸ் நீர் குளியல் :- பழங்காலத்து ராஜா – ராணிகள் எப்போதும் இயற்கை பொருட்கள் நிறைந்த குளியல் தொட்டியில்தான் குளிப்பார்களாம். அதிலும் குறிப்பாக ரோஜா இதழ்களை தொட்டியில் முழுக்க நிரப்பி அதன் மேல்தான் குளியல் செய்வார்கள். மேலும் வெறும் நீரில் குளிக்காமல் ரோஜா நீரில் குளிப்பார்களாம். இது அவர்களின் சருமம் மிக மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

கழுதை பால் குளியல் :- இது மிக வியப்பாகத்தான் இருக்கும். அந்த காலத்து ராஜா ராணிகள் கழுதை பாலிலும் தினமும் தங்கள் குளியலை மேற்கொள்வார்களாம். குளியல் தொட்டியில் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் கழுதை பாலை ஆகியவற்றை கலந்து விடுவார்கள். இதில்தான் தினக்குளியலை செய்வார்கள். இந்த குளியல் சருமத்தை மிக இளமையாக வைக்கவும், சுருக்கங்கள் வராமலும் காக்கும்.

நீண்ட அடர்த்தியான கூந்தல் :- ராணிகள் தங்கள் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வைக்க தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். ஆலிவ் எண்ணெய் முடியை மிகவும் உறுதியாக வைக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் வைக்கும். முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் கலந்த ஆலிவ் எண்ணெய் குளியல் நன்கு உதவும்.

பாத அழகிற்கு :- முகம் மற்றும் முடியின் அழகை மட்டும் அவர்கள் பாதுகாத்து வரவில்லை. மாறாக உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் அழகு சேர்த்து வந்தார்கள். அந்த வகையில் பாதங்களை அழகாக வைக்க தயிர் மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து பாதங்களில் தடவி வந்தனர். இது பாதங்களை மிக அழகாக வைக்க உதவும்.

மேலும் படிக்க

5 நிமிசம் ப்ளீஸ்!

sinegithi Radio

7 நாளைக்கு இத சாப்பிட்டால் ஆயுசு நூறு

fathima sahira

ஆண்களே உங்கள் அழகையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள்!

sinegithi Radio