வாழைப்பூ உருண்டை பிரியாணி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தேவையானவை – வாழைப்பூ உருண்டை செய்ய: வாழைப்பூ (மீடியம் சைஸ்) – ஒன்று, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, முந்திரி – 6, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை கப், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

பிரியாணி செய்ய: பாசுமதி அரிசி – 2 கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா – ஒரு கைப்பிடி அளவு , வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தேங்காய்ப்பால் – 2 கப், உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வாழைப்பூ உருண்டைக்கான அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து, நன்கு பிசிறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பிரியாணி செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லித்தழை, புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்க்கவும். நன்கு ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். குக்கரைத் திறந்ததும் நன்றாக கிளறி, பொரித்து வைத்துள்ள வாழைப்பூ உருண்டைகளை சேர்த்துக் கலந்து சுடச்சுட பரிமாறவும்.

இதையும் படிக்கலாமே
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட எளி...
அதிகமாக பகிருங்கள்: மாதம் ரூபாய் 25000...
பேஸ்புக் - மொபைலில் ஆபாச உரையாடலா - இண...
ஒரே ஒரு குறும்படத்தில் ஒட்டுமொத்த சமூக...
மாமியார் மடக்குவது எப்படி..! திருமணமா...
5 நிமிட நடனத்திற்கு 5 கோடி வாங்கும் வி...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
தல அஜித்-தின் மகளை வைத்து ரசிகர்கள் செ...
கொழுப்பு உணவுகள் உண்டதும் கட்டாயம் இதை...
பிரபல நடிகர் தனுஷின் லீலைகளை அம்பலபடுத...
காதலில் விழுந்த பிக் பாஸ் ஜோடி ..! டு...
தமிழகத்தில் 28 வயது பெண்ணின் செயல் ..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •