பொடுகுத் தொல்லைக்கு புளித்தத் தயிர்

செதில் செதிலாக பொடுகு தலையில் இருந்து வெள்ளை நிறப் பொடியாக உதிரும். அருவருப்புக் காட்டும். இதற்கு காரணம் தூய்மையற்ற குளியல்தான். ஆம்! தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு சரிவர தலைக்கு குளிக்காமல் இருப்பதுவும், சில கிருமிகளினாலும் இந்த பொடுகு உருவாகின்றது.

சாதாரண குளியல் முறையுடன் வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து சிகைக்காய் போட்டு தேய்த்துக்குளிப்பது, முடி அடிப்பகுதியினை பொடுகு தாக்குதல் இன்றி காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இந்த பொடுகினை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் புளித்த தயிரினில் தோன்றும் ஒரு விதமான கிருமிகளுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகது.

பொடுகு வந்தவர்கள் புளித்த தயிரினை தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவிட்டு அதன்பிறகு வெந்நீரில் தலைமுடியை சுத்தமாக அலசி குளித்து வரவும், இது போன்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து குளித்து விட்டு நான்காவது நாள் சிகைக்காய் போட்டு குளித்து வந்தால் பொடுகுத்தொல்லை மறைந்துவிடும்.

குறிப்பு:-
***********

வெட்பாலை தைலம் என்ற எண்ணெயை சித்தா அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வந்து தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது போல தடவி வந்தால் பொடுகு போய்விடும். மூன்று நாட்கள் தடவி முடித்துவிட்டு, நான்காவது நாள் சிகைக்காய் போட்டு வெந்நீரில் தலைக்கு குளிக்க பொடுகு தொல்லை என்றுமே இருக்காது.
http://namnalam.blogspot.in/2015/08/blog-post_46.html