இவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள், விட்டமின் C, ஃபோலேட் 10 % , ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை கொண்ட பப்பாளி பழத்தை சிலர் மட்டும் சாப்பிடக் கூடாது.

பப்பாளியை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
கர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் எனும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது, இது கருச்சிதைவை உண்டாக்கும்.
பப்பாளியில் உள்ள பாப்பைன் எனும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகளை தீவிரமாக்கும். எனவே ஆஸ்துமா உள்ளவர்கள், பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.
விட்டமின் C பப்பாளியில் ஏராளமான அளவில் உள்ளது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமானால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்து, சிறுநீரக கற்களை உருவாக்கும்.
ஆண்கள் பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், ஆண்களுக்கு வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைத்து, கருவளத்தை பாதிக்கும்.
பப்பாளியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் பப்பாளியில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் சென்றால், வயிற்று உப்பிசம் பிரச்சனையை உண்டாக்கும்.
தினமும் அதிக அளவு பப்பாளியை சாப்பிட்டால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின் நம் உடலில் அதிகம் சேர்வதால், வெளிரிய மஞ்சள் நிறம் நம் உள்ளங்கையில் ஏற்படும். அது கரோட்டினீமியா எனும் சரும நோயாகும்.
குறைவான ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால், மிகவும் ஆபத்தாகும்.

இதையும் படிக்கலாமே
மூக்கில் நீர் ஒழுகுதல், சளி உருவாகுதல்...
முடி வளர
ஊதிப் பருத்த உடம்பை குறைக்க ஐடியா
சுகம் தரும் சோம்பு
பப்பாளி பழத்தால் கிடைக்கும் நன்மைகள்!!...
ஒருவரின் அகால மரணத்தை அறியப்படுத்தும் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
VJ.ரக்‌ஷன் வீட்டிற்கு சென்று ஜூலி அதிர...
தெரிந்துகொள்வோம் - சுவைமிகு சமையலுக்கு...
மாதம் 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் லாப...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •