மதுரவீரன் ‘படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ட்ரெய்லரைப் பார்த்ததும் வியந்து ‘மதுரவீரன் ‘படத்தை வாங்கி வெளியிடும்

ஏ.சீனிவாச குரு !!நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.

 

பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் “மதுரவீரன்” .
வி -ஸ்டுடியோஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் தான் விஜயகாந்த் வெளியிட்டார்,

இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வியந்து போய் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார், இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா
கவனிக்கிறார்.

படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகியுள்ளது படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் புதிய படம் தான் இந்த,’மதுரவீரன்’.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப் பட்டுள்ளது.

இப் படத்தில்,சண்முக பாண்டியனின் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி மற்றும் ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார், P.G.முத்தையா.
சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார், பாடல்கள் யுகபாரதி, எடிட்டிங் கே.எல்.பிரவீன், கலை விதேஷ், சண்டைப் பயிற்சி ‘ஸ்டன்னர்’ சாம்,
நடனம் சுரேஷ்,
நிர்வாக தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி,
விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.

 

 

இதையும் படிக்கலாமே
The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
Trespass - திடுக்! திடுக்! திரிலிங் பட...
maragatha kaadu
ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய் மற்றும...
இசைஞானியின் களத்தூர் கிராமம்
நடிகை சமந்தா ஹனிமூன் புகைப்படங்களை வெள...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
பிரபல நடிகை தூங்கும்போது செல்ஃபி எடுத...
8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் ஏராளமா...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •