இன்று ஆகஸ்டு 26 உலகம் முழுவதும் அன்பு,

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கருணையை வாரி வழங்கிய முன்னுதாரண சமூக சேவகரும்….
#அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான அன்னை தெரசா (Mother Teresa) பிறந்த தினம்….
*யூகோஸ்லேவியாவில், ஸ்கோப்ஜே என்ற நகரில் பிறந்தவர் (1910).
*ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பது இவரது இயற்பெயர். 8 வயதில் தந்தையை இழந்தார்.
*இவரது அம்மா மிகவும் தர்ம சிந்தனை கொண்டவர். இவர்கள் வீட்டில் எப்போதுமே குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிறைய பேர் சேர்ந்து உண்பார்கள். ‘
*மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு வாய் உணவைக்கூட உண்ணக்கூடாது’ என்பது அம்மா சொல்லிக்கொடுத்த பாலபாடம்.
*12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்தார். 18 வயதில் கன்னிகா ஸ்திரீயாக மாறுவது என முடிவு செய்தார்.
*வீட்டைவிட்டு வெளியேறி, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ‘சகோதரி தெரசா’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
1923-ல் ‘சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி’ என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்தார்.
*1929-ல் கல்கத்தா வந்தார். அங்கு ஒரு பள்ளியில் சுமார் 17 ஆண்டுகள் பணி புரிந்தார்.
1946-ல் இவர் உணர்ந்த மற்றுமொரு ஆன்மிக அழைப்பை ஏற்றார், ஏழைகளுக்கு உதவுவதற்காக, கற்பித்தல் பணியிலிருந்து விலகினார்.
*கல்கத்தாவின் மிக ஏழ்மையான குடியிருப்புகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு
*சேவை செய்வதற்காக செவிலியர் பணிக்கான மருத்துவப் பயிற்சி பெற்றார். இவருடன் இணைந்து சேவையாற்றும் 10 பேர் கொண்ட முதல் குழு உருவானது.
1950-ல் ‘ஆர்டர் ஆஃப் தி மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற அமைப்பை உருவாக்கினார். தனது அமைப்புகளுக்கு தெருத்தெருவாகச் சென்று நிதி உதவி திரட்டினார்.
*1952-ல் ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற இல்லத்தைத் தொடங்கினார். கல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார். அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டார்.
*எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நலவாழ்வு மையங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்கான ஆலோசனை அமைப்புகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் ஆகியோருக்கான மையங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.
*சிறந்த சமூக சேவகர்’, ‘ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பாதுகாவலர்’ என உலகமே இவரைப் பாரட்டியது.
*உலகில் எங்கெல்லாம் மக்கள் துன்புறுகிறார்களோ அங்கெல்லாம் ஓடோடிச் சென்று உதவினார்.
*சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்’ என்ற இவர் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளி வந்துள்ளது.
*இவரது மனிதநேயப் பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது.
*பத்ம விருது, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது, அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், பிலிப்பைன்சின் ரமன் மகசேசே விருது, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றார்.
*இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின.
*அரை நூற்றாண்டுக்கும் மேலாக மானுட சேவையில் இறை தரிசனம் பெற்ற அன்னை தெரசா 1997-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார்.
*அப்போது 123 நாடுகளில் இவரது 610 தொண்டு அமைப்புகள் இயங்கி வந்தன.

இதையும் படிக்கலாமே
Karuppan Press Meet stills
10 வயது சிறுவன் தனக்கு ஒரு மனைவி வேண்ட...
மெல்பேணில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்
மலசல கூடம் கட்டுகின்ற முறையை திருடி செ...
அமலா பால் இந்த விளம்பரம் உனக்கு தேவையா...
அதிகமாக பகிருங்கள்: இன்று கன மழை காரணம...
மது அருந்த அவருடன் வரும்படி கட்டாய படு...
முன்கூட்டியே மாதவிடாய் வரனுமா? இயற்கைய...
ஓடும் பஸ்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந...
ஆண்களை மடக்கும் தலையணை மந்திரம்
பிரான்சில் இனி யாரும் சட்டவிரோதமாக குட...
தமிழ் நடிகை நித்தியாமேனன் ஓரினச்சேர்க்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •