உணவுக்கு மட்டுமா உப்பு?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன? வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறது.

அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும்.

இரும்புப் பொருட்களில் துருப் பிடித்திருந்தால் அவற்றின் மேல் உப்பு கொண்டு தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.

பட்டுத் துணிகளைத் துவைக்கும் போது நீரில் சிறிது உப்பைக் கலந்து கொண்டு அதில் துணிகளை அலச வேண்டும். பட்டுத்துணியின் மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமல் இருக்கும்.

வீட்டில் தரையைக் கழுவும் போது சிறிது உப்பை நீரில் கலந்து கழுவினால், தரை காய்ந்த பின்பு ஈக்கள் தரையில் மொய்க்காது.

சுத்தமான நெய்யில் ஒரு சிறு கரண்டி அளவு உப்பைப் போட்டு முழுவதையும் சூடுபடுத்தி வைத்தால் நெய் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

சமையல் பாத்திரங்களில் வெங்காய வாசனை போகாமல் இருந்தால் உப்பு கலந்த சுடுநீரில் அப்பாத்திரத்தைக் கழுவினால் அந்த வாசனை போய் விடும்.

நீண்ட பயணத்தால் கால் களைப்பு ஏற்பட்டு இருந்தால் சுடுநீரில் சிறிது உப்பைப் போட்டு அந்த உப்புச் சுடுநீருக்குள் கால் பாதங்களைச் சிறிது நேரம் வைத்து இருங்கள். கால் களைப்பு காணாமல் போய் விடும்.

தலை முடி உதிர்ந்து கொண்டிருக்கிறதா? நீரில் சிறிது உப்பு கலந்து அந்த நீரில் தலைமுடியை அலசுங்கள். தலைமுடி உதிர்வது நிற்கும்.

துணியில் மைக்கறை அல்லது இரத்தக்கறை இருந்தால் அந்தக் கறையின் மேல் உப்பைத் தேய்த்துச் சுடுநீரில் அலசுங்கள் கறை அகன்று விடும்.

கடுகு எண்ணெய்யில் உப்பைக் கலந்து பல் துலக்கினால் பல் உறுதி பெறும்.

குக்கரின் அடியில் படிந்திருக்கும் கரையைப் போக்க, வெறும் குக்கரை அடுப்பில் வைத்துச் சூடேற்றுங்கள். பின்னர் உப்புத் தூளை உள்ளே போட்டு சிறிது நேரத்தில் இறக்கி அடிப்பாகத்தைக் சுத்தம் செய்தால் கரை இருக்காது.

இதையும் படிக்கலாமே
மாதவிடாய் பிரச்சனைகளும் அதற்கான தீர்வு...
வெண்டக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மை...
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந...
கர்ப்பிணி பெண்கள் காதில் கேட்க கூடாத த...
காலை பாலுடன் இதை சாப்பிட்டால் உடம்பு க...
வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால...
காளான் சாப்பிடுங்கள்,சந்தோசமாக வாழுங்...
எப்போதும் இளமையாக தினமும் இதை சாப்பிடு...
அதிகமாக பகிருங்கள்:உடல் எடையை குறைக்க ...
தொந்தி, தொப்பையை குறைக்க 10 ரூபாய் செல...
அதிகமாக பகிருங்கள் பயன்பெறுங்கள்: இரத்...
தலைவலி,காச்சல் என அடிக்கடி பாராசிட்டமா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •