ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

கடையில் கிடைக்கும் ஹேர் டை முடியை சேதப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. வீட்டிலேயே உங்களுக்கு இயற்கையான ஹேர்டைகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பெண்களே முக அழகிற்கு மட்டுமில்லாமல் கூந்தல் பராமரிப்பிற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள். சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டையில் அமோனியா உள்ளது. இது உங்களது முடியை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. வீட்டிலேயே உங்களுக்காக சில இயற்கையான ஹேர்டைகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

காபி உங்களது முடியை அடந்த கருப்பு நிறமாக மாற்ற உதவுகிறது. நீங்கள் டார்க் கலர் உடைகளை அணிந்து வெளியே செல்லும் போது உங்களது முடி அடர்ந்த கருமை நிறத்தில் இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும். இதற்கு காபியை திக்காக காய்ச்சிக்கொள்ள வேண்டும், இது ஆறிய பின்னர் இரண்டு ஸ்பூன் காபி தூள் போட்டு தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசிவிட வேண்டும். கண்டிஷ்ணருக்கு பதிலாக வினிகர் உபயோகித்தால் நிறம் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

உங்களுக்கு மிக அடர்ந்த நிறம் வேண்டாம். இயற்கையான கருமை நிறம் போதும் என்றால், நீங்கள் டீ பேக்கை டிரை செய்யலாம். இது நரை முடிகளை மறைக்க உதவுகிறது. இதற்கு 2-3 டீ பேக்குகளையோ அல்லது அதற்கு சமமான டீத்தூளையோ எடுத்து, நீரில் நன்றாக கொதிக்க விட வேண்டும். இதனை கண்டிஸ்னருடனோ அல்லது தனியாகவோ தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவினால், உங்களுக்கு தேவையான கருமை நிறம் கிடைத்துவிடும்.

நீங்கள் பல வண்ணங்களில் முடி இருக்க வேண்டும் என விரும்பினால், அதற்காக ஹேர் கலரிங் செய்து முடியின் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாகவே நிறங்களை பெறலாம். அது எப்படி என்று காணலாம்.

நீங்கள் முடியில் சிவப்பு நிறல் நிழல் தெரிய வேண்டும் என்றால் அதற்கு சாமந்தி, ரோஜா இதள் மற்றும் செம்பருத்தி இதள்கள் பயன்படும். இவற்றை சூடான நீரில் காய்ச்சினால் அதன் நிறம் வெளிப்படும். இந்த நீரை முடிக்கு ஸ்பேரே அல்லது அப்ளை செய்து முடிந்தால் சூரிய ஒளியில் சிறிது நேரம் உலர்த்தினால், இயற்கையான நிறம் கிடைக்கும். இதனை அடிக்கடி கூட செய்யலாம், இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி காலம் காலமாக முடி, கை, கால், நகங்களுக்கு நிறமூட்டவும், குளிர்ச்சியை கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிவப்பு – ஆரஞ்ச் நிறத்தை முடிக்கு கொடுக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் மருதாணி பௌடர், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை ஒன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்து 2 முதல் 6 மணி நேரம் இருந்தால் முடிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
பெண்ணின் உடல் ஒரு புதிர்.அவர்களை புரிந...
பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொ...
ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான...
தன் மனைவிக்கு முன்னாள் காதலனின் தொடர்ப...
ஆண்களே உஷார்! ஆண்களைத் தாக்கும் Top 8 ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறி...
சிவப்பான பெண்களை கண்டு ஆண்கள் மயங்குவத...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •