முடி வளர

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
  கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
  வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
  வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
  இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
  முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
  காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
  தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
  செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
  நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
  முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
  முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
  காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
  சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
  புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
  தலை‌முடி பராம‌ரி‌ப்‌பி‌ற்கு ;
  வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலா‌ம்.
  இரண்டு முட்டைகளை உடைத்து அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் எடு‌த்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம்.
  வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம்.
  செ‌ம்பரு‌த்‌தி இலையை அரை‌த்து அதனை தலை‌யி‌ல் தே‌‌ய்‌த்து ‌ஊற‌வி‌ட்டு ‌பி‌‌ன்ன‌ர் ந‌ன்கு அல‌சி ‌விடவு‌ம்.
  இர‌வி‌ல் லேசான சூ‌ட்டி‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் காலை‌யி‌ல் தலை‌க்கு கு‌ளி‌‌க்கலா‌ம்.
இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
வாழைத்தண்டு
எந்தெந்த இடத்தில் முத்தம் கொடுக்க வேண்...
இந்தியாவில் பாசுமதி அரிசி பயிரிட அதிரட...
இதை முழுவதும் படியுங்கள். உங்கள் வருங்...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
உங்கள் தொலைபேசி சூடாகிறதா? காரணம் என்ன...
வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லையா? தீர்...
தமிழகத்தின் அடுத்த முதல்வராக கமல்ஹாசன்...
பெண்களை காதலிக்க வேண்டும் என ஆசையா? இத...
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாட...
மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட ந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •