பிரெஞ்சு திரையுலகில் கால் பதித்த நம்ம வீட்டு நட்சத்திரங்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கடின முயற்சி, நீண்ட காலப் போராட்டம். அதுவும் தாயகத்தைப் பிரிந்து, வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த ஓயாது பணிச் சுமைக்கு நடுவே  பயணிக்கும் புலம் பெயர் வாழ்வு. இத்தகைய இன்ன பிற விடயங்களுக்கு நடுவே ஒரு கலைஞனாக, நடிகனாக வாழ்வது, படைப்புக்களை பகிர்வது. அதுவும் பத்து வருடங்களைக் கடந்து மக்கள் மனதில் பெரு விருப்பு பெற்ற ஈழத்துப் படைப்பாளியாக வாழுவது இவை எல்லாம் சாத்தியமாகுமா?

ஆம் நிச்சயமாக, இதனைச் சாத்தியப்படுத்தி, இன்றளவில் பல தரமான, நேர்த்தியான முழு நீளத் திரைப்படம், குறும்படங்கள் வாயிலாக பயணித்துக் கொண்டிருக்கிறார் பிரான்ஸில் வாழும் நம்மவர் மன்மதன் பாஸ்கி. எப்போதும் ”அக்கம் பக்கம்” என நமக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் முகத்தை செல்பி எடுத்து அலசும் பாஸ்கி, இன்னோர் படி நிலையினைக் கடந்து, இப்போது பிரெஞ்சு திரையுலகிலும் கால் பதித்திருக்கிறார்.

உண்மையிலே தமிழனாக, அதுவும், முழுக்க முழுக்க சினிமா என்றால் “தென்னிந்திய படைப்புக்கள் தான்” என்ற வட்டத்திற்குள் கூனிக் குறுகி நிற்கும் பலரை, திரும்பி பார்க்க வைக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஓர் படைப்பாளியாக நம்ம வீட்டுப் பிள்ளையாக பயணிக்கிறார் மன்மதன் பாஸ்கி.

Le Sens De La Fete“ எனும் திரைப்படத்தின் மூலம் பிரான்ஸில் வாழும் நம்ம வீட்டு நட்சத்திரங்கள்  பலர்  மன்மதன் பாஸ்கியுடன் இணைந்து, அறிமுகமாகியுள்ளார்கள். அந்த வகையில்,  அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். www.puradsifm.com

தமிழகத்தில் திரைப்படமாக வெளிவந்த தோழா திரைப்படத்தின் மூலமான INTOUCHABLE எனும் படத்தினை இயக்கியிருந்த அவர்களே, இப்படத்தினை இயக்கியுள்ளார்.(புரட்சி வானொலிக்காக கமலேஷ்)

இப் படத்தில் மன்மதன் பாஸ்கி அவர்கள் றோசான் எனும் பாத்திரத்தினை ஏற்று இப்படத்தில் நடித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவரவுள்ள இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரங்களை மன்மதன் பாஸ்கியின் முக நூல் ஊடாகவும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/mahendranbaskar

இதையும் படிக்கலாமே
த்ரிஷா இல்லனா நயன்தாரா-2 விரைவில்!!!
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
சிறிய பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் ச...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
பிக் பாஸ் ஆர்த்தியா இப்படி புகைப்படம் ...
அடங்காது ஆடும் ராதிகாவால் அவமானப் பட்ட...
தயவு செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில...
காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் ச...
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மவிபூஷ...
சடலமாக மிதந்த தந்தையும் 2 குழந்தைகளும்...
தமிழனின் சவாலை ஏற்ற பாலிவூட் பிரபலங்கள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •