ஜிம்மிக்கு கம்மல் புகழ் ஷெரில்

ஜிமிக்கி கம்மல் பெண் ஷெர்லின். இளைஞர்களுக்கு விடுத்த வேண்டுகோள்.

புதிதாக வெளியான மோகன்லால் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஜிமிக்கி கம்மல். இந்த பாடலுக்கு சில கேரள பெண்கள் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக அது மிகவும் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் அப்பாடலில் நடனம் ஆடிய ஷெர்லின் என்ற கேரள பெண் தமிழ் இளைஞர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.

ஷெர்லின் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், உங்களின் ஆதரவுக்கு நன்றி, அதுவும் தமிழ் மக்கள்.ஆனால் நீங்கள் அனிதா பிரச்சனைக்கு ஆதரவு தர வேண்டும் எம் நடனத்திற்கு எவ்வளவு மதிப்பளித்தீர்களோ அதை விட ஆயிரம் மடங்கு முக்கியமானது அனிதாவின் மரணம்.

அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க எம் இளைஞர்கள் போராட வேண்டும்  என்று பதிவு செய்துள்ளார் ஷெர்லின்.